பேருவளை-பன்னில கிராமம் முழுமையாக மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பேருவளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பன்னில கிராமமானது முழுமையாக மூடுவதற்கு பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நேற்று முன்தினம் ஒருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (29) அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் ஒரு சுற்றுலாத்துறை வாகனத்தின் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCEHiru