பள்ளிவாசல் காணிக்குள் குர்பானி கொடுக்க அனுமதி இல்லை

பள்ளிவாயல் அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கு அனுமதி வழங்காதிருக்க, இலங்கை வக்பு சபை தீர்மானித்துள்ளது.

சகல பள்ளிவாசல்களுக்கும் இவ்வறிவித்தலை விடுப்பதாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான முஸ்லிம்களின் சமய அனுஷடானங்கள் தொடர்பில் குறித்த அறிவிப்பை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

தினகரன்

Read:  மின் துண்டிப்பு நடைமுறையில் மாற்றம்