அக்குறணை வர்த்தக சங்கத்தின் வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும்

சென்ற 23/03/2020 திங்கட்கிழமை அக்குறனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட சமயம் பஸாரிற்கு வருகை தரும் பொதுமக்களை நோய் தொற்று ஏற்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கும் வண்ணம் தொண்டர்கள் களமிறக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.

இவ்வேளைத்திட்டமானது ஏனைய பஸார்களுடன் ஒப்பீட்டளவில் மிகச்சிறந்ததொரு முன்னுதாரணமாக விளங்கியதுடன் வாடிக்கையாளர்களுக்கும் சிரமங்கள் இன்றி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலகுவாக அமைந்ததுடன் சனநெரிசலும் தவிர்க்கப்பட்டது. “அல்ஹம்துலில்லாஹ்”

அதே போன்று நாளை (26/03/2020) வியாழக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் திங்கட்கிழமை போன்று பஸாரை முறையாக வழிநடாத்துவதற்கு அதிகளவில் தொண்டர்குழு தேவைப்படுகின்றனர்.

உங்களது அமைப்பின் மூலம் முடியுமான வரை தொண்டர்களை, நாளை வியாழக்கிழமை காலை 6 மணிக்கு முன்னராக அஸ்னா பள்ளிவாயிலுக்கு அனுப்பி வைத்து எமது முன்னெடுப்பிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு:
உங்களது அமைப்பின் மூலம் எத்தனை அங்கத்தவர்களை அனுப்பி வைக்க முடியும் என்பதையும் முன்னதாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
அக்குறணை வர்த்தக சங்கம்
தொடர்புகளுக்கு
Mr.A.S. Riyas (President)
0773293032
Mr. M.R.M Nazlan (Secretary)
0776283306