அவதானம்.. போலி அரச அதிகாரிகள் நடித்து திருடர்கள் கைவரிசை!

கொழும்பில் ஏழ்மையில் வாடும் தமிழ் முஸ்லிகள் குடும்பங்கள் முடுக்கு வீடுகளுக்குள் தோட்டங்களுக்குச்
சென்று சில போலி அரச அதிகாரிகள் வேசம் போட்டு நடித்து சில கள்வா்கள் வீடு , தொடா்மாடி வீடு தருவதாகச் பொய் சொல்லி பணம் பறித்துவருகின்ற சம்பவம் கடந்த 1 வருடமாக நடைபெற்று வருகின்றது.. .

 இவ்வாறாக இதுவரை கொழும்பில் 12 ஏழைப் பெண்கள் வயதானவா்கள் வந்து என்னிடம் முறையிட்டுள்ளாா்கள். அவா்கள் . அன்றாடம் கூலித் தொழில் செய்து உழைத்து சிறுகச் சிறுக சேகரித்த பணம் 5ஆயிரம் 10ஆயிரம் 50ஆயிரம் இலட்சம் வரை ஏமாற்றிச் சுரையாடும் கும்பல் ஒன்று குறிப்பாக மாளிகாவத்தை, தெமட்க்கொட மட்டக்குழி போன்ற பல பிரதேசங்களில் நடமாடி வருகின்றனா். . ஆண்கள் இல்லாத வீடுகள், வயதான பெண்கள், வீட்டில் நோயான பிள்ளைகளை வைத்திருக்கும் குடும்பங்களது தகவல்களை சேகரிக்கின்றனா் அல்லது அவா்கள் கடந்த காலத்தில் வீடு ஒன்றைப் பெற்றுக் கொள்ள வீடமைப்பு அமைச்சருக்கு அனுப்பிய மனுக்களை எவ்வாரோ சேகரித்து வைத்து்ளளாா்கள்.

அதனை வாசித்து அந்த முகவரிக்குச் செல்கின்றனா். அக்கடித்தில் எழுதப்பட்டுள்ள தகவல்களை அந்தக் குடும்பத்திற்கு தத்துருபாமாக சொல்லி அவா்களின் உண்மைத்தன்மையைப் பெற்று நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனா். இவா்கள் களவு, பொய் சொல்லி பணம் பறிக்கின்றனா்.. பொதுமக்கள். மிகவும் அவதானமாக இருங்கள்.

இப்படத்தில் இருக்கும் மனிதா் இன்று 10.08.2020 எனது அலுவலகத்தில் வந்து வீடு தருவதாக கள்வா் ஒருவா் எவ்வாறு தனது பணத்தினை சுரையாடிய கதையைக் கூறி முறையிட்டாா். அம் மனிதா் இதனை ஊடகங்களுக்குச் எடுத்துச் சொல்லுங்கள் எனவும் அவா் அழுத்தமாகச் சொன்னாா்..என்னைப் போன்ற ஏழை எளிய மக்கள் மேலும் சிலர் இவ்வாறான கள்வா்களிடம் மீளவும் ஏமாறக் கூடாது எனவும் சொன்னாா்.

நான் அன்றாடம் சைவக் கடைகளுக்கு போய் தேங்காய் திருவிக் கொடுப்பன், மரக்கரி வெட்டிக் கொடுத்த சுமாா் ஒரு நாளைக்கு 750 ருபா தருவாங்க அதில் மிச்சம் பிடிச்சி 200 அல்லது 100 ருபா சோ்த்து என்ட மனைவி 5000 ருபா வைத்திருந்தாள் கடந்த டிசம்பா் 2019 – 28ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஒரு வாட்ட சாட்டமானவா், வெள்ளைச் சேட் புள்சிலிப், கையில் பெரிய போன் அடுத்த கையில ஒபீஸ் பேக் சப்பாத்து அணிந்து, டை அணிந்து அவன் எனது வீட்டுக்கு வந்தான், அவா் சிங்களவா் வயது 35 மட்டும் இருக்கும்.

Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா

நானோ ஒரு பலகையிலான வீடொன்றை 3ஆயிரம் ருபாவுக்கு வாடகையில் வாழ்ந்து வருகின்றேன். எனது பெயா் ஜீ.சரச்சந்திரன், வயது 72 162-250 ஏ பளுமொன்டால் வீதி கொழும்பு 15 உள்ள ஒரு முடுக்கு வீடுகள் கொண்ட தோட்டம். நானும் எனது நோயான மனைவியும் மகனும் இந்த வீட்டில் வாழ்கின்றோம். எனக்கு கண்பாா்வை மங்கி, எனக்கு நோய், நான் இறந்தாலும் மரணச் செலவுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் சோ்த்து வை என்று சொல்லித்தான் எனது மனைவி 5ஆயிரம் ருபா காசு வைத்திருந்தாள் அன்று வந்தவன் சொன்னான் நான் வீடமைப்பு திணைக்கள அதிகாரி என்றான். .

 – அவன் சொன்னான் நீங்க வீடு ஒன்று கேட்டு 2 வருடத்திற்கு முன் சஜித் பிரேமதாசாவுக்கு மனு கொடுத்தீங்களா ? என்று கேட்டாா். ஆம் இந்தா இருக்கு உங்கட மனு இதுதானே ஆமாமம் .அப்ப உங்களுக்கு இந்த மட்டக்குழியில் இருக்கிற 10 மாடி வீடுகள் இந்த மாடியில் ஈ புளக்கில் 2ஆம் மாடியில் ஈ.வன் வீடு ஒன்று ஒதுக்கியிருக்கு என்று இந்தா எனக்கு கடிதத்திட கொப்பி இருக்கே.

உங்கட இந்த பெயா் முகவரி இருக்கு அப்ப எனது மனைவி அந்த நேரம் வீடு கட்டும்போது உங்கட மனு கவனத்திற்கு எடுக்கப்படும் என்று சஜித் பிரேமதாச அனுப்பிய கடிதம் தபாலில் வந்தது இந்தா இருக்கு என்று கொடுத்தாள் அதனையும் அவன் வாங்கிக் கொண்டான் எங்களுக்கு முன் தொலைபேசியில் ஒரு உயா் அதிகாரியில் பேசினான் . எங்களுக்கு ஒதுக்கிய வீடு வேரு ஒரவா் யாரோ களவாக குடியிருக்கிறாங்க, என்றான் அவங்களை எழுப்பி உங்கள குடியிருக்க வைக்கிறத்துக்குரிய நடவடிக்கை உடன் எடுப்பன் இப்பதான் எங்கட வீடமைப்பு பெரிய ஜயாவிட்ட பேசிட்டன் என்றான்.

ஜனவரியில் நீங்க புதிய வீட்டுக்கு போகலாம் என்றதும் எனது மனைவி அப்படியே சந்தோசத்தில மயங்கி விழுந்திட்டாள் அதன் பிறகு இந்த விண்ணப்பத்தினை நிரப்பி என்று பெயா் முகவரி எல்லாம் கேட்டு எழுதினான்.

பேனையால் எழுதி சைன் வைக்காதிங்க கைவிரலை பிடித்து அவன்ட போல்பெயின் பேனையால பெருவிரலில் மை தீட்டி அவர் கொண்டுவந்த போம் ஒன்றில் கையொப்பம் . வாங்கினான்.. முத்திரைக்கு ஒரு பத்தாயிரம் வேனும் என்றான். இப்ப உடன் உங்கட வேலையைச் செய்யனும் உங்களுக்கு ஒதுக்கிய ஈ புளக்கிள இருக்க ஆட்கள வெளிய போடனும் முதலில் முத்திரைச் செலவுக்கு காசு வேனும் என்றாா். .

Read:  மீண்டும் ரணில் !!

எனது மனைவியோ எனது மரணத்திற்காக சோ்ந்தது 6ஆயிரம் ருபா அதில் 5ஆயிரம் ருபா கொண்டு போய்க் கொடுத்தாள். வீட்ட ரெடியாக்கிட்டு மீண்டும் ஜனவரி மாதம் உங்கட வீட்டுக்கு வாரன் குடிபோரத்துக்கு ரெடியா இருங்கள் என்றான். அதோடப் போனவன் போனவன் தான் மீண்டும் வரயில்லை. நாங்களும் மிகவும் சந்தோசத்தில் பாரு தெய்வம் நம்மிள கைவிடவில்லடி கொடுக்குர தெய்வன் நமக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு நம்ம காலடியில் வந்து கொடுத்திருக்கிறான். என சொல்லிக் கொண்டோம். பாரு 50 வருடமா நாம் பலகை வீட்டில அங்கேயும் இங்கேயும் வாழ்ந்ததுக்கும் நாம் பட்ட கஸ்டத்துக்கு நான் சாகப்போர நேரத்திலயாவது வீடு கிடைக்கிறது.

நீயாவது அந்த வீட்டில போய் வாழ் என்று மனைவியிடம் சொன்னேன். அங்கப் பாரு அன்னாந்து பாரு அந்த மோதர சந்தியில் அன்னா தெரியுது பெரிய உயரமான பிளட்ஸ் அது தான் நமக்கு கிடைக்கப் போகுது. படிக் கட்டு ஏறத்தேவையில்லைடி, கரண்ட் லிப்ட் இருக்கு அந்த பிளட்ஸ்டுக்கிட்ட இருவரும் 3 நாட்கள் போய் அந்த தொடா்மாடி வீடுகளை சுற்றிப் பாா்த்திட்டும் வந்தோம். நம்மலுக்கும் இனி ஒரு தொடா் மாடி வீடு கிடைக்கும் யாருகிட்டையும் நீ சொல்லவேண்டாம். எனப் பேசிக் கொண்டோம் ஜனவரி மாதம் வரை நாங்கள் என்னிய கற்பனைகள் பல . இறுதியாக ஜனவரி போய் ஆகஸ்ட் மாதம் வந்திட்டு நாங்க ஏமாந்து விட்டோம்.பிறகு தெரியவந்து எங்களப் போல எங்கட தோட்டத்தில 500, 495 ருபாவும் அவன் வாங்கிட்டு போயிருக்கான். நாங்க மட்டுமல்ல கொழும்பில் பல இடங்கள் முஸ்லிம் தமிழ் குடும்பங்கள் இப்படியான கும்பலினால் ஏமாந்தது தெரியவந்தது. 9 மாதம் கடந்துவிட்டது. அவனைத் தேடி செத்சிரிபாயவில் உள்ள அமைச்சுக்கு முன் கேற்றடிய போய் அந்த அலுவலகத்திற்கு போய் அவனைத் தேடினோம். ,மாளிகாவதைதை வீடமைப்பு ஆபிசுக்கும் போனோம்.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.

வீதியில் டை கட்டி ஆபிஸ் பேக் வெள்ளச் சேட் போட்டு சப்பாத்து போட்டு பெரிய போன் பேசிட்டுப் போர எல்லோரையும் நன் ஒரு முறை உற்றுப் பாா்ப்பன் அவன்தான ? என்று ஏமாற்றம். இறுதியாக உங்களுககிட்ட வந்திருக்கன். ஜயா ? என்றாா் அந்த மனிதா். உங்களைப்போன்று கடந்த வருடம் மட்டும் 12 ஏழை முஸ்லிம் தமிழ் பெண்கள் இவ்வாறாக 50 ஆயிரம், 10 ஆயிரம் 5 ஆயிரம் என கொடுத்துவிட்டு உங்களைப் போன்று பல கன்னீா்க் கதைகள் சொல்லி எனக் கிட்ட அழுவாா்கள். இதற்கு முதலில் நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள பொலிஸில் போய் முறைப்பாடு ஒன்றைப் போடுங்கள் , அதன் பின்னா் அவா்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்குள் ஒரு முறைப்பாட்டு பொலிஸ் நிலையம் உள்ளது அங்கும் முறையிடுங்கள்.

உங்களைப் போன்று 12 பேருக்கு இவ்வாறு தான் நான் அறிவுரை சொன்னேன். இந்தக் காலத்தில இப்படி வீட்டுக்கு வந்து யாரு வீடு தருவானா சற்நு யோசிக்கிறது இல்லை, போன் படம் எடுத்திருக்க முடியும். சீசிரி கமராவில அவன் செக் பண்னி பிடித்திருக்காலம். அதேல்லாம் நாங்க வாழ்ர தோட்டத்தில இல்லை. சின்ன போன் ஒன்று அது கமரா இல்லை. என்றாா். இதனைப் பொலிஸாா். சி.ஜ.டி ஊடாகத் தான் கண்டு பிடித்து இந்தக் கள்ளக் கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தல் வேண்டும். . எனது பல அறிவுரைகளை அவருக்கு விளக்கினேன், அவா் என்னோடு பேசிய திருப்தியில் சற்று நிம்மதி மூச்சு விட்டு சந்தோசத்தில் வீடு சென்றாா். இப் பதிவினை ஏனையவா்களும் அவதானமாக இருக்கும்படி பதிவிடுகின்றேன்.

அன்மையில் பம்பலப்பிட்டியில் வாழுகின்ற ஒரு முஸ்லிம் பெண் 25 இலட்சம் ருபாவை இவ்வாறு வழங்கியிருந்தாா். அவரும் ஏமாற்றப்பட்டுள்ளதாக என்னிடம் முறையிட்டாா்

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

VIA(அஸ்ரப் ஏ சமத்) Madawala News