ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியோர் மீண்டும் ஐ.தே.க.வில் இணைந்தனர்: பாலித ரங்கே பண்டார

(நா.தனுஜா) ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 16 பேர் நேற்று திங்கட்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துகொண்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கம்பளை நகரசபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 10 பேர், கண்டி மாநகரசபையைப் பிரிதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் மூவர் மற்றும் மேல்மாகாண மாநகரசபை உறுப்பினர்கள் மூவரே இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துகொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கம்பளை நகரசபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அனைவருமே இப்போது  ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்திருப்பதாகக்  கூறிய பாலித ரங்கே பண்டார, இவ்வாறு இணைந்து கொண்ட  உறுப்பினர்கள்  பிரத்யேகமாக  ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்து இது குறித்த விபரங்களைப் பகிர்ந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்திருப்பதாகவும், இது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் பாலித ரங்கே பண்டார மேலும் கூறியுள்ளார். -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page