மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பல்பொருள் அங்காடிகளில் இணையவழி (Online) விநியோக சேவை மூலம் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்படவில்லை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா நிலைமை காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயண தடைக்கு ஏற்ப மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் பல்பொருள் அங்காடிகளில், இணையவழி ஊடாக (Online) விநியோக சேவை மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய மதுவரித் திணைக்களம் அனுமதி அளித்ததாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே மதுவரித் திணைக்களம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.