அரசாங்க சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான திகதி நீடிப்பு

அரசாங்க சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க  விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பொது சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம். ஏ. பி. தயாசேனரத்ன  தெரிவித்துள்ளார்.கீழ்க்காணும் பரீட்சைக்கு  விண்ணப்பிக்கும் திகதியே ஒத்திப் போடப்பட்டுள்ளன  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சேவையின் மூன்றாம் வகுப்புக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை, நில பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் நிர்வாக சேவைகள் பிரிவில் தரம் 3 க்கு உதவிப் பணிப்பாளர்கள் பதவிக்கு சேர்ப்பதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப்பரீட்சை, வர்த்தக அமைச்சின் கீழ் வரும் வர்த்தக திணைக்களத்தின் நிர்வாக சேவை பிரிவின் மூன்றாம் தரப்பிற்கு வர்த்தக உதவி பணிப்பாளர் பதவிக்கு சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை, மேலாண்மை சேவை அலுவலர் சேவையின் உயர்ந்த தரத்திற்கு பதவி உயர்வு பெறுவதற்கான போட்டிப் பரீட்சை இதன் மேலாண்மை சேவை அலுவலர் சேவையின் உயர் தரத்திற்கு பதவி உயர்த்துவதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பத் திகதியை நீடிப்பதற்கான காலமே எதிர்வரும் ஜூலை 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்