தீர்வையற்ற வாகன இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் நேற்று தீர்மானம்

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

அரச நிறுவனங்களுக்கும் அமைச்சுக்களுக்கும் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை நிறுத்துவதற்கும் அதற்குரிய கட்டளையை இரத்துச் செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்துள்ளார்.

இது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பமல்ல என்பதை வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ அமைச்சரவைக்கு ஆலோசனையொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் இதன்படி வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் (12) நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதுலளிக்கும் போதே அமைச்சர் கெஹெலிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை செய்வதற்கான தீர்மானம் கடந்த 07 ஆம் திகதி நிறுத்தப்பட்டதன் பின்னர் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் குறிப்பிட்ட வங்கிகளுடன் பேச்சு நடத்தி தெளிவான ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் இதன்படி மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கோவிட்19 பிரச்சினை எழுவதற்கு முன்னர் தேவையான வாகனங்களை அரசு நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தாலும், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந் நிலைமைக்கு இது பொருந்தாது என்பதால் இத் திட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கப்பட்ட உடனேயே ஒரு அரசு வங்கியால் கடன் கடிதங்கள் வழங்கப்பட்ட மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது என்றும், அதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறை உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இதனை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள போதும் சில தரப்பினர் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பதற்கு ஆரம்பித்துள்ளமை அவர்களது அரசியல் கபடத்தனமா ? அல்லது இதனை இரத்துச் செய்வதற்கான இது முறையைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாத காரணமா? என்பது ஒரு கேள்விக்குரியாகவே இருக்கிறது என்றும் அவர் தெரித்தார். – தினகரன்-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page