பேக்கரி உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா ? – பதிலளிக்கிறது அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம்

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுள்ளதால் எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் தவைலர் என்.கே.ஜயவர்த்தன தெரிவிக்கையில்,

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதனால் பேக்கரி தொழிற்சாலையை பாதுகாத்துக்கொள்வதென்றால், எதிர்வரும் தினங்களில் சிறிய உணவுப் பொருளுக்கும் விலை அதிகரிக்கவேண்டி ஏற்படும்.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாலே இந்த தீர்மானத்துக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையில் பேக்கரி உரிமையாளர்களில் 30 வீதமானவர்கள் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களினாலே செயற்படுகின்றன.

தற்போது அரசாங்கம் இந்த இரண்டுவகையான எரிபொருட்களினதும் விலையை அதிகரித்திருக்கின்றது. இது எமது தொழிலுக்கு பாரியளவில் பாதிக்கின்றது.

அத்துடன் நாட்டின் தற்போதைய நிலைமையில் பேக்கரி உற்பத்திகள் நடமாடும் வாகனங்கள் ஊடாகவே விநியோகிக்கப்படுவதால், அந்த வாகனங்களுக்கு எரிபொருள் செலவு அதிகரித்திருக்கின்றது.

அதனால் எரிபொருள் விலை அதிகரிப்பு பேக்கரி தொழிலுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

(எம்.ஆர்.எம்.வசீம்) -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page