மண்மேடு சரிந்து ஒரே வீட்டில் 4 பேர் மண்ணுக்குள் புதைந்த முழு சம்பவம்…

அரநாயக்க மற்றும் மாவனல்லை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது தெவனகல கிராமம். இங்கு  ஏற்பட்ட மண்சரிவு முழு நாட்டையும் கவலை கொள்ள வைத்துள்ளது. இச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்  மரணமடைந்துள்ளனர். கடந்த 03 ஆம் திகதி ஆரம்பமான கன மழையை தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இந்த மண்சரிவு நிகழ்ந்ததோடு அந்த இடத்தில் ஒரு வீடொன்று  இருந்ததைக் கூட அடையாளம் காண  முடியாதவாறு மலைபோல் மண் குவிந்திருந்ததைக் கண்டோம். அதைச் சூழ உள்ள  வயல்கள் குளம்போல் காணப்பட்டன.

அண்மையில் ஊடகங்களில் அதிகமாகப் பேசப்பட்ட சரித்திர பிரசித்தி வாய்ந்த தெவனகல  புனித பூமியில் அமைந்துள்ள  மலை   அடிவாரத்திலேயே இச்சம்பவம்  நிகழ்ந்துள்ளது. 50 ஏக்கருக்கும் அதிகமான மலையின் ஒரு பகுதியில் புனித பூமிக்கு சொந்தமான மண் மேட்டிலேயே  இந்த வீடு அமைக்கப்பட்டிருந்ததோடு அரநாயக்க  செயலாளர்   பிரதேசத்துக்கு சொந்தமான கரகம்பிட்டியகொட கிராமத்தில் ஆகும். இந்த  வீடு மண்சரிவுக்கு உட்பட்ட பின்னர் அதன் அருகில் இருந்த இரண்டு வீடுகளை சேர்ந்த குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

எவ்வாறாயினும் கடும் மழை,  மண்சரிவுக்குள்ளான வீட்டின் மீது காணப்பட்ட மண் மற்றும் பாறைகளை அகற்றுவதற்கு இராணுவத்தினர் மற்றும் அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் பிரதேச மக்களும் மிகவும் சிரமப்பட்டார்கள்.  ஏனென்றால் மண்ணை அகற்றுவதற்கு பெரிய பெகோ இந்திரத்தை அந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கான பாதை வசதிகள் காணப்படாததால் இரண்டு சிறிய பெக்கோ இயந்திரங்கள் மூலம் மண்மேடு அகற்றப்பட்டது. ஆறு மணிநேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.பின்னர்  உடல்கள் அம்பியூலன்ஸ் மூலம் மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அரசின் பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளும் அப்பிரதேசத்தில் தங்கியிருந்து தேவையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். காலை 9 மணியளவில் மண்ணில் புதைந்திருந்த 23 வயதான கங்காணம்லாகே உமேஷா  மதுவந்தி விஜேரத்ன  மீட்கப்பட்டார். அதன் பின்னர் அக்குடும்பத்தில் 57  வயது பிள்ளைகளின் தந்தையான கங்கணம்லாகே விஜேரத்னவும் 55 வயதான தாயார் வீரசிங்க பேடிகே லலிதா  வீரசிங்கவும் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அன்றைய தினம் பகல் வேளையில் 29 வயதான  அவர்களது மகன் கங்காணம்லாகே ஷானிக  புஷ்பகுமாரவின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தாய் தந்தை மற்றும் மகளும் மகனும் ஆவார்கள். தந்தைவேலைக்கு செல்வதில்லை வீட்டிலேயே இருக்கின்றார். மகள் மாவனல்லையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக  பணிபுரிந்தார். 29 வயதான மகன் மாலைதீவில் சில வருடங்கள் பணியாற்றிய பின் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.அவர் மண்சரிவுகுட்பட்ட பிரதேசத்துக்கு அப்பால் புதிதாக பாதுகாப்பான ஒரு இடத்தில் பாதி நிறைவடைந்திருந்த வீட்டை  கட்டிய பின்னர் மீண்டும் வேலைக்காக மாலைதீவுக்கு  செல்லும் எண்ணத்திலேயே இருந்துள்ளார்.
அவரது அந்த வீட்டை அமைக்கும் பணி நிறைவடைந்திருந்தால்  இவ்வாறான துயர சம்பவத்துக்கு அவர்கள்  ஒரு போதும் முகம் கொடுத்திருக்க மாட்டார்கள்.

அன்று காலை தனது மாட்டை  வேறு ஒரு இடத்தில் மாற்றி  கட்டுவதற்காக  கிராமத்தைச் சேர்ந்த 53 வயதான பிரேமரத்ன மண்சரிவு நடந்த அந்த வீட்டை கடந்து சென்றுள்ளார்.
அவர் தனது மாட்டின் கயிறை கழற்றும்போது பெரும்  சத்தம் ஒன்று கேட்டுள்ளது. பின்னால் திரும்பிப் பார்க்கும்போது மண்சரிவை கண்டுள்ளார். அவர் ஒரு நொடியில் இச் சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மண்மேடு வீட்டை மூடி தான் இருக்கும் வயல்வெளிக்கு வருவதை கண்டுள்ளார்.  தனது வாழ்வில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை காணாத அவர் உடனடியாக உரக்கக் கத்தி கிராம மக்களை  அழைத்துள்ளார்.  கிராம மக்கள் அவ்விடத்திற்கு வரும்போது அனைத்துமே முடிவடைந்துள்ளன.

பின்னர் பொலிசாருக்கும்  பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் அறிவித்து  மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தெவனகல  கிராமத்தில்  மண் சரிவொன்று நிகழ்ந்துள்ளது.  மலையைச் சுற்றி அனுமதியின்றி வசிப்பவர்கள் பற்றி நாம்  ஊடகங்களில் பலமுறை தெரிவித்துள்ளோம். அங்கு அநேகமான வீடுகள் மலையடிவாரத்தில் இவ்வாறு கல்லின் மேல் உள்ள  மண் மேட்டிலேயே  அமைக்கப்பட்டுள்ளன. மலை மேலிருந்து விழும் நீர்  அவர்களின்  வீடுகளின் மீதும்  மண்மேட்டின் மீது விழுகின்றது.  நீரை மண்மேடு  உறிஞ்சுவதால் இவ்வாறான மண் சரிவை தடுக்க முடியாது. அதனால் நாம் இதற்கு முன்னர் அவதானித்துகுரிய இடமாக குறிப்பிட்டுள்ள தெவனகல கட்டுகஹவத்த  மற்றும் உடபமுனுவ கிராமங்களில் பாறையின் மேல் உள்ள மண் மேட்டில் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டுள்ள  வீடுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இது தொடர்பாக அரநாயக்க பிரதேச சபை  செயலாளர் இசட். ஏ.எம்.  பைசல் தெரிவித்ததாவது,…

இவ்வீட்டில் நான்கு பேர் வசித்து வந்துள்ளார்கள். நான் விடுக்கும்  வேண்டுகோள் ஒன்றேயாகும்.  அரநாயக்கவில் மாத்திரமல்ல இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் அவதானித்துக்குரிய இடங்கள் உள்ளன. அதனால் அனர்த்தம் நிகழக்கூடிய இடங்களில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிக மழை பெய்யும் காலங்களில் வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்த விடயமாகும். இவ்விடயங்கள் குறித்து ஆராய அரச அதிகாரிகள்  அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  அதன் பிரகாரம் அவர்கள் அவ்வாறான குடும்பங்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்கள். விகாரைகளுக்கு அல்லது பாடசாலைகளுக்கு அவர்களை  ஆபத்தான காலங்களில் செல்லுமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இந்த இடங்களிலுள்ள அவதானம் குறித்து மக்கள் கவனம் செலுத்தாமை  காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இவர்கள் புதிதாக  பாதுகாப்பான இடம் ஒன்றில் வீடொன்றையும் கட்டி வந்துள்ளார்கள்.  அதிக மழை  காரணமாகவே  மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் அவ்வாறான  இடங்களில் வசிப்பவர்கள் கவனமாக வாழ வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

கேகாலை அனர்த்த முகாமைத்துவ தொடர்பாடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் அனுஷ்க சமில,

மாவட்டத்தை பாதித்துள்ள சீரற்ற காலநிலை நிலைமை காரணமாக எதிர்வரும் நாட்களில் அதிக மழையை எதிர்பார்க்கலாம்.

நாம் இங்கு விசேட கவனம் செலுத்த வேண்டும் என அடையாளம்  கண்டுள்ள குடும்பங்களை அவர்களின் தகவல்  தொடர்பாடல் உபகரணங்களுடன்  உடனடியாக அகற்றுவதே நாம் செய்யக் கூடிய விடயமாகும். ஏனென்றால் கடந்த காலங்களில் நாம் பெற்ற அனுபவங்களின் படி கடந்த காலங்களில்  கேகாலை மாவட்டத்தில்  மழைக்காலங்களில்   அதிகமாக மண்சரிவுகள் நிகழலாம். அதனால் கட்டாயமாக ஊடகங்கள், அனர்த்த முகாமைத்துவ  மத்திய நிலையங்கள், எமது பிரதேச அதிகாரிகளின் அறிவுறுத்தல்களோடு  இணைந்து செயல்படுவதன் மூலம் உயிரிழப்புகளை  தவிர்க்கலாம்.

சமன் விஜயபண்டார, தினமின
தமிழில்: வீ.ஆர். வயலட்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page