அக்குறணை மக்களுக்கு அக்குரணை பிரதேச செயலாளர் விடுக்கும் முக்கிய செய்தி

இன்று ஜூன் மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2021 ஆம் ஆண்டு இப்பொழுது நேரம் மாலை 8 மணி கொவிட் பரவல் காரணமாக நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்

எனவே இக்காலப் பகுதிக்குள் அரசு சட்ட திட்டங்களையும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி நடந்து கொள்ளுமாறு உங்களை அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்

மக்களுடைய அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் முகமாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்கள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்பதை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்

எனவே அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதற்காக வேண்டி நீங்கள் பிரதேச செயலகத்திற்கு வருகை தர தேவையில்லை

இது தொடர்பாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடும் கலந்துரையாடி உடன்பாடு காணப்பட்டிருக்கின்றது

அவ்வாறே அவசர தேவைகளின் நிமித்தம் விசேட அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய தேவைகள் இருந்தால் உங்கள் பிரிவுக்குப் பொறுப்பான கிராம அலுவலரோடு தொடர்பு கொள்ளுங்கள் எனவே நீங்கள் முன்கூட்டியே அவருக்கு அறிவித்து கிராம அலுவலர் ஊடாகவே விசேட அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உங்களை வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்

அவ்வாறே அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் முறைகேடாக பயன் படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் இருந்தால் அவற்றை பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு உங்களை வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்

அத்தோடு அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டிருக்கின்ற அனுமதிப்பத்திரங்களை அவை வழங்கப்பட்டிருக்கின்றன தேவைகளுக்காக மாத்திரம் உரிய வரையறைகளைப் பேணி பயன்படுத்துமாறு அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்களை வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்

அனுமதிப்பத்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தெரியவந்தால் அவை ரத்து செய்யப்படும் என்பதையும் உங்களுடைய மேலான கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்

நன்றி