அனைத்து திரவப் பெற்றோலிய வாயு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு 12.5 கிலோகிராம் வீட்டுப் பாவனைக்கான சிலிண்டர்கள் நாடு முழுவதும் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி,
எந்தவொரு வியாபாரியும் இலங்கையினுள் விற்பனை நோக்கத்திற்கான திரவப் பெற்றோலிய வாயு உள்ளடங்கிய 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர்களை விற்பனை செய்ய மறுத்து உடைமையில், பாதுகாப்பில் மற்றும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.
அத்தகைய சிலிண்டர் வகையினை கொள்வனவு செய்யாது விடுமாறு பாவனையார்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வற்புறுத்த முடியாதெனவும் கூறப்பட்டுள்ளது.
இப் பணிப்புரை 2021.06.09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை
அதி விசேஷமானது
2231/8 ஆம் இலக்கம் – 2021 ஆம் ஆண்டு யூன் மாதம் 09 ஆந் திகதி புதன்கிழமை
(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)
பகுதி 1 : தொகுதி (I) – பொது அரசாங்க அறிவித்தல்கள்
பணிப்புரை இல. 78
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம்
10 (1) (ஆ) (ii) ஆம் பிரிவின் கீழான விசேட பணிப்புரை
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 10 (1) (ஆ) (ii) ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் செயற்படுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது, அனைத்து திரவப் பெற்றோலிய வாயு (LPG) உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு 12.5 கிலோகிராம் வீட்டுப் பாவனைக்கான சிலிண்டர்கள் நாடு பூராகவும் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான அளவில் அனைத்து திரவப் பெற்றோலிய வாயு விற்பனை நிலையங்களிலும் காணப்பட வேண்டும் என இத்தால் பணிப்புரை விடுக்கின்றது.
மேலும் எந்தவொரு வியாபாரியும் இலங்கையினுள் விற்பனை நோக்கத்திற்கான திரவப் பெற்றோலிய வாயு (LPG) உள்ளடங்கிய 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர்களை விற்பனை செய்ய மறுத்து உடைமையில், பாதுகாப்பில் மற்றும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது எனவும் அத்தகைய சிலிண்டர் வகையினை கொள்வனவு செய்யாது விடுமாறு பாவனையாளர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வற்புறுத்த முடியாதெனவும் இத்தால் அறிவுறுத்தல் விடுக்கின்றது. இப்பணிப்புரை, 2021 ஆம் ஆண்டு யூன் மாதம் 09 ஆந் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கட்டளைப்படி,
ஜெனரல் சாத் திசாநாயக்க ()தவிசாளர்.)
கொழும்பு,
2021, யூன் 09.
இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
