ஜனாதிபதியின் அனுமதிகிடைத்தால் உடன் அமுல்; கொரோனா பரவலை கட்டுப்படுத்த அவசர வியூகம்
பயணத்தடை அமுலாக்கலால் கொரோனா வைரஸ் பரவல் குறையாத நிலைமை இருப்பதால் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.
கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தி வருவது குறித்தும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமலிருப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இப்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் நாடும் பெரும் ஆபத்தை சந்திக்கவேண்டிவருமென பலர் இங்கு சுட்டிக்காட்டியதுடன், கடும் உத்தரவுகளுடனான ஊரடங்குச் சட்டத்தை குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்காவது அமுல்படுத்தவேண்டுமென வலியுறுத்தினர்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாடுகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைந்திருப்ப தனை கருத்திற்கொண்டு, இங்கும் அதே நடைமுறைகளைப் பின்பற்றவும் இதற்கான அனுமதியை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கோருவதற்கும் நேற்றைய கூட்டத்தில் இறுதிசெய்யப்பட்டது.
விசேட செய்தியாளர் – தமிழன் பத்திரிகை 7-6-2021