பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இராணுவ தளபதியின் கருத்து

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (07) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இன்று காலை வரையில் எவ்வித அறிவுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

14 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தேவை ஏற்படின் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஇமாம், முஅத்தின்களுக்கு 5000 ரூபா நிவாரணம் முஸ்லிம் சமய திணைக்களம் தெரிவிப்பு
Next articleகொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு 11 ஸ்டிக்கர்கள்: முழு விபரங்கள் இதோ!