தீப்பிடித்து கடலில் மூழ்கும் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை ஆழ்கடல் நோக்கி நகர்த்திச் செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பின்புறத்தில் ஏற்பட்ட நீர் கசிவின் காரணமாக குறித்த கப்பலி நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கப்பலின் பின் பகுதி கடலில் மூழ்க ஆரம்பித்த நிலையில், கப்பலை ஆழ் கடல்நோக்கி நகர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை கப்பலை ஆழ் கடல்நோக்கி நோக்கி நகர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.

தற்போது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஐம்பது வீதம் கடலில் மூழ்கியதுடன் அது தரைதட்டியுள்ளதால் கப்பலை ஆழ் கடல்நோக்கி நகர்த்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-வீரகேசரி பத்திரிகை-