ஈஸ்டர் தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமிற்கு உதவியதுடன், அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் அம்பாறை ஓலுவில் திருமண பதிவாளரான 55 வயதுடைய நபரொருவர், இன்று திங்கட்கிழமை (31.05.2021) அதிகாலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்து, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே திருமண பதிவாளரான சுபைதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பதிவாளர் வீட்டில் கடந்த 2017 ம் ஆண்டு 2018ம் ஆண்டு சஹ்ரான் வந்து தங்கி சென்றுள்ளதாகவும், அவருக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே,குறித்த சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் -வீரகேசரி பத்திரிகை-