எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி அதிகாலையுடன் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விடுவிக் கப்படுவதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த வாரம் நிலைமைகளை ஆராய்ந்து நிலைமைகள் மோசமாயின் தீர்மானத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளதாக கொவிட் 19 செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரையில் தளர்வின்றிய பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 ஆம் திகதிக்கு பின்னரும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ள நிலையில் அதற்கான தீர்மானங்கள் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அதற்கமைய ஒரு சில நடவடிகைகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்களையும் கருத்தில் கொண்டு பயணக்கட்டுப்பாடு தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன. எனினும் கடந்த 25 ஆம் திகதி மக்கள் தமது தேவைகளுக்காக அவதிப்பட்டு செயற்பட்டனர். இதன்போது மக்களை குறைகூற நாம் விரும்பவில்லை. ஏனைய நாடுகள் போன்று அல்லாது எமது மக்கள் மிகவும் பொறுமையாக அர்ப்பணிப்புடன் எமக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். அதனை நாம் ஏற்றுக்கொண் டாக வேண்டும்.
எனினும் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். நாட்டின் நிலைமைகள் குறித்து வைத்திய நிபுணர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறும் காரணிகளை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்றால் போல் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றோம். அவ்வப்போது தளர்வுகளை ஏற்படுத்தாது இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக நாட்டினை முடக்க வேண்டும் என இறுதியாக கூடிய செயலணிக் கூட்டத்திலும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர்.
எனவே அவர் கோரிக்கைகளை களின் ஆய்வுகள், தரவுகள், 4 கருத்தில் கொண்டு கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க நேர்ந்தது. அதற்கமைய 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்மானங்களை எடுக்கையில் நாம் மக்களை கருத்தில் கொண்டுள்ளோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் சகலருடனும் கலந்துரையாடி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடமாடும் வர்த்தக செயற்பாடுகள் மூலமாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:ஜூன் 7ஆம் திகதிக்கு பின்னர் பயணத்தடை தளருமா? அல்லது தொடர்ச்சி யாக நீடிக்குமா?
பதில் : ஜூன் 7 ஆம் திகதிக்கு பின்னர் எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து இப்போது எதனையும் கூற முடியாது. 7 ஆம் திகதிக்கு பின்னர் நாடு திறக்கப்படும் என்ற தீர்மானமே இப்போது வரையில் உள்ளது. ஆனால் 7 ஆம் திகதிக்கு இன்னமும் ஒரு வாரத்திற்கும் அதிகமான காலம் உள்ளது. ஆகவே அடுத்த வாரம் மீண்டும் செயலணிக் கூட்டம் கூடும். அதில் சுகாதார தரப்பினர் முன்வைக்கும் தரவுகள் மற்றும் மக்களின் செயற்பாடுகள், வைத்தியர்களின் பரிந்துரைகள் என்பவற்றை கருத்தில் கொண்டு யாருக்கும் நெருக்கடி கொடுக்காது தீர்மானம் எடுக்கப்படும்.
இப்பே எடுக்கப்பட்ட தீர் மானத்தில் மாற்றமில்லை. ஆனால் அடுத்த வாரம் நிலைமைகளை பொறுத்தே அடுத்த கட்ட செயற்பாடுகள் தீர்மானிக்கப்படும். ஜனாதிபதி எப்போதும் நாட்டுக்கு ஏற்ற தீர்மானத்தை எடுப்பார்.
கேள்வி : தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் எந்த மட்டத்தில் உள்ளன?
பதில் : தடுப்பூசிகள் ஏற்றும் வேலைத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து தொடர்ச்சியாக எமக்கு தடுப்பூ சிகள் கிடைத்து வருகின்றன. நேற்று இரவும் எமக்கு 1 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் கிடைத்தன. அடுத்த வாரமும் கிடைக் கவுள்ளன.
எனவே சகல பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் பங்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டங்களில் கிடைக்கும் தடுப்பூசிகள் அவசியப்படும் பகுதிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும். முதலாம் தடுப்பூசியாக சைனோபார்ம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு ஜூன் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து இரண்டாம்கட்ட தடுப்பூசி ஏற்றப்படும். மக்களுக்கான தடுப்பூசிகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. எனவே மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
(ஆர்.யசி) வீரகேசரி 30-5-21