20 வயதுப் பெண் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு ; இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1298 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (26) 02 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் மே 20 ஆம் திகதி தொடக்கம் மே 25 ஆம் திகதி வரை 27 கொவிட் மரணங்கள்கள் பதிவாகியுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 மே மாதம் 26 ஆம் திகதி 02 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார். மேலும், மே மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை கொவிட் தொற்றாளர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மே 20 ஆம் திகதி 02 மரணங்களும், மே 21 ஆம் திகதி ஒருவரும், மே 22 ஆம் திகதி 04  மரணங்களும், மே 23 ஆம் திகதி 07 மரணங்களும், மே 24 ஆம் திகதி 07 மரணங்களும், மே 25 ஆம் திகதி 06 மரணங்களும், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1298 ஆகும்.

01. களுத்துறை வடக்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச ;சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02. ஹாலிஎல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 20 வயதுடைய பெண் ஒருவர், பதுளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச ;சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் குருதியில் ஒட்சிசனின் அளவு குறைவடைந்தமையால் இதயமும் நுரையீரலும் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. ஹாலிஎல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், பதுளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் மூச்சிழுப்பு நோய் மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

04. மாவத்தகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய ஆண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச ;சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, உயர் குருதியழுத்தம் மற்றும் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தடை போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05. குருநாகல் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய பெண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச ;சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றால் மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

06. கல்கமுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 78 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

07. மினுவங்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 55 வயதுடைய ஆண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08. மாஸ்பொத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

09. கெக்குனுகொல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 20 ஆம் திகதியன்று குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

10. பொலகஹவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. குருநாகல் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற ;று மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

12. அங்குறுவாதோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 94 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. கோனபொல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று ஹொரன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 மார்புத் தொற்று மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. புலத்சிங்கள பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரன ஆதார வைத்தியசாலையில் சிகிச ;சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

15. நயினமடம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய பெண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

16. ஹப்புகஸ்தலாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய பெண் ஒருவர், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

17. நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய பெண் ஒருவர், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந ;த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

18. இரத்தோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் இதயநோய் மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

19. இரத்தோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந ;த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவடன் இதயம் மற்றும் சுவாசத் தொகுதி செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

20. கொஸ்வத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2021 மே மாதம் 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, மூளை வீக்கம் மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

21. மல்வான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 55 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

22. மட்டக்குளி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

23. மட்டக்குளி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

24. நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கான தேசிய நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

25. கொழும்பு 15 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

26. கொழும்பு 14 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 46 வயதுடைய பெண் ஒருவர் 2021 மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

27. கொழும்பு 15 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற ;ற வந ;த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

28. வாழைச்சேனை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய பெண் ஒருவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர்குருதியழுத்தம் மற்றும் இதயநோய் மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

29. கட்டுனேரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 88 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 20 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.-வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page