அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொது பிரச்சினைகளை தெரிவிக்க விசேட எண்

அத்தியாவசிய சேவைகள் குறித்து பொது மக்கள் அணுகுவதற்காக விசேட ஹாட்லைன் இலக்கமொன்று இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பிரதமரின் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அலரி மாளிகையில் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலணியின் கீழ் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு 1965 என்ற புதிய ஹாட்லைன் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று முதல், இந்த ஹாட்லைன் இலக்கம் மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை சமர்ப்பிக்க முடியும்.

-வீரகேசரி பத்திரிகை-