தேசியப் பட்டியல் நெருக்கடி- சம்பிக , மனோ, ரிஷாத், ஹக்கீம் சஜித்துக்கு அழுத்தம்..

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நெருக்கடி தொடர்வதாக கொழும்பில் இருந்து கிடைத்த தகவல்கள் கூறின.

சம்பிக,மனோ, ஹக்கீம், ரிஷாத் ஆகியோரின்  கட்சிகளுக்கு ஒரு ஆசனம் வீதம் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு சஜித் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஏற்கனவே பெயரிடப்பட்ட ஏழு பேரில் டயனா கமகேவுக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் ( அவரின் கட்சியே ஐக்கிய மக்கள் சக்தியாக மற்றம் பெற்றது ) ஏற்கனவே பெயரிடப்பட்ட ஹரீன், எரான் , மத்தும பண்டார , மயந்த, இம்தியாஸ், திஸ்ஸ உள்ளிட்டவர்களில் இருவரை மாத்திரம் பெயரிட வேண்டிய நிர்பந்தத்திற்குள் சஜித் அணி தள்ளபட்டுள்ளதாக கூறப்பட்டது.

சஜித் அணி நாளைய தினம் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்குமென கூறப்பட்டது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter