திணைக்களத்தை குறை கூறாதீர்கள் – பணிப்பாளர் அஷ்ரப் வேண்டுகோள்

பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகை, தராவீஹ் தொழுகை மற்றும் ரமழான் மாத அமல்கள் நிறுத்தப்பட்டமைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை குறை கூறாதீர்கள். விமர்சிக்காதீர்கள், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் சுற்று நிருபத்தையே திணைக்களம் அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. நாட்டினதும் சமூகத்தினதும் பாதுகாப்பு கருதி கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.

ஆகக் கூடிய தொகையாக 25 பேரே பள்ளிவாசல் ஐவேளை தொழுகைகளில் கலந்து கொள்ள முடியும் என்பது பள்ளிவாசல்களில் மாத்திரமல்ல ஏனைய மதத்தவர்களுக்கும் இந்த எண்ணிக்கை யானோரே மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே கட்டுப்பாடுகள் பள்ளிவாசல்க ளுக்கு மாத்திரம் அல்ல என்பதில் நாம் தெளிவு பெறவேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையிவே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பான சுற்று நிருபங்கள் வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சுக்கே அதிகாரமுள்ளது. எனக்கு அது தொடர்பில் சுற்று நிருபம் வெளியிட முடியாது. அவ்வாறான சுற்று நிருபங் களை அமுல்படுத்துவதே எனது கடமை.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பள்ளிவாசல்களுக்கென்று பிரத்தியேகமாக சுற்று நிருபங்கள் வெளியிடுவதில்லை. சுகாதார அமைச்சின் சுற்று நிருபங்கள் அனைத்து மதத்தலங்களையும் உள்ளடக்கியதாகும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளி வாசல்களில் ரமழான் கஞ்சியை நிறுத்திவிட்டதாக சிலர்குறை கூறுகிறார்கள் விமர்சிக்கிறார்கள்.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் சுற்று நிருபம் கஞ்சி கொடுக்க வேண்டாம் எனக்கூறவில்லை. பள்ளிவாசலுக்குள்ளே கஞ்சி விநியோகிப்பதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் வளாகத்தில் விநியோகிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்று நிருபத்தை தவறாக விளங்கிக் கொண்டுள்ள சுகாதார அதிகாரிகள் சிலரே பள்ளிவாசல் வளாகத்தில் விநியோகிக்கப்படும் கஞ்சிக்கு தடைவிதிக்கிறார்கள்.

பள்ளி வாசல்களை நாம் மூடச் சொல்லவில்லை. பள்ளிவாசல்களில் கூட்டமாக கூடாநீர்கள், சுகாதார வழிகாட்டல்களை தவறாது பின்பறிறுங்கள் என்றே கூறுகிறோம். எமது சமூகத்தில் ஒருசிலரே அரசாங்கத்தையும், திணைக்களத்தையும் இவ்விவகாரத்தில் விமர்சிக்கிறார்கள், பெரும்பாலானோர் ஒத்துழைக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் உணர்ச்சி மேலீட்டினாலே இவ்வாறு செயற்படுகிறார்கள். அவர்கள் மீது நாம் கோபப்படவில்லை என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page