திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு 2 வாரங்கள் தடை

திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, பொது நிகழ்வுகளுக்கு இரண்டு வார காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் நாளாந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும்  மேல்  பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் பரவுவல் அதிகரித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters