அனைத்து அரச பணியாளர்களுக்கான புதிய சுற்றுநிரூபம் – முழுமையாக தமிழில்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை : 02/2021(1)
எனது இலக்கம்: EST-6/03/LEA/3381
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு 07.
2021.04.27

அமைச்சுக்களின் செயலாளர்கள்
இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள்
மாகாணங்களின் பிரதம செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்
மாவட்ட செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்கள்
பிரதேச செயலாளர்கள்
அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள்

அரச சேவையத் தடையின்றி நடாத்திச் செல்லல்

01 கொவிட் 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனத்தில் எடுத்து 2021.03.05. ஆம் திகதிய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 02/2021ன் ஏற்பாடுகள், மறு அறிவித்தல் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றன.

02 2021.04.27 ஆம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களினதும் உத்தியோகத்தர்களுக்கு, பஞ்சாங்க மாதமொன்றுக்கு அதிகபட்சமாக 08 வேலை நாட்களாக அமையும் விதத்தில் வாரமொன்றுக்கு 02 நாட்கள் உத்தியோகத்தர்களின் லீவுகளிலிருந்து கழிக்காது சேவைக்குச் சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதி வழங்க முடியும்.

03 மேலே குறிப்பிட்டவாறு ஒரு பஞ்சாங்க மாதத்தினுள் உத்தியோகத்தர்கள் தமக்குரிய தமது சாதாரண லீவுகளைப் பெற்றுக் கொள்ளாது அதிகபட்சமாக சேவைக்குச் சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதி வழங்க முடியுமான 08 நாட்களை விஞ்சாத விதத்தில் வேலைக்குச் சமுகமளிக்கும் முறையொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

04.நாளாந்த மக்கள் வாழ்க்கையை உரிய முறையில் பேணி வருவதற்குத் தேவையான சேவை வழங்கலை தடங்களின்றி பேணி வருவதற்காக உத்தியோகத்தர்களை வாரத்தில் 03 நாட்களுக்கு மேல் சேவைக்கு அழைக்க வேண்டிய தேவை இருப்பின், அதனடிப்படையில் உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பில் குறித்த நிறுவனத் தலைவர் தீர்மானிக்க முடியும்.

Read:  இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?

05.அவ்வாறு மாதாந்த சுழற்சி வேலை முறையை உருவாக்கியதன் பின்னர் உத்தியோகத்தரொருவர் சுழற்சி வேலை முறைக்கு இணங்க வேலைக்குச் சமுகமளிக்க வேண்டிய நாளொன்றில் சேவைக்குச் சமுகமளிக்காவிட்டால் மாத்திரம் அவருடைய தனிப்பட்ட லீவுகளிலிருந்து கழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

06 சுழற்சி வேலை முறையில் வேலைக்கு அழைக்கப்படாத நாட்களிலும் கூட ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் இணைய வழியில் தமது பணிக்கடமையுடன் தொடர்புடைய செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருத்தல் வேண்டும்.

07 மருத்துவ அல்லது வேறு காரணங்களுக்காக சுழற்சி வேலை முறைக்குள் உள்வாங்கப்படாத உத்தியோகத்தர்களின் லீவுகள் தொடர்பில் வழமையான விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

08 இவ்வாறு சுழற்சி வேலை முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் சேவை நிலையங்களில் ஆள் இடைவெளியைப் பாதுகாப்பதுடன் வைரஸ் பரவுவது குறைவடையும் என்பதனால் அந்நோக்கத்திற்கு முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும் என்பதுடன் உத்தியோகத்தர்களின் வசதியை அல்லது விருப்பத்தை அதன் பின்னரே கவனத்தில் கொள்ள வேண்டும்.

09 எவரேனும் அரச உத்தியோகத்தரொருவர் தற்போதைய சூழ்நிலையில் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருந்து, அவ்வாறு தனிமைப்படுத்தப்படக் காரணம், அரசாங்க தனிமைப்படுத்தல் திட்டங்களை மீறியமைக்கான தண்டனையாக இல்லாதிருப்பின், அத்தகைய உத்தியோகத்தர்களுக்கு அந்த தனிமைப்படுத்தல் காலப் பகுதியை தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 12:9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க சம்பளம் கொண்ட ஒரு காலப் பகுதியாகக் கருதுதல் வேண்டும்.

10 கொவிட் 191 பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களுக்கும் எதிர் காலத்தில் வெளியிடப்படும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கும் இணங்க தமது நிறுவனங்களில் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் நிறுவனத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

Read:  உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி

ஒப்பம்./ ஜே.ஜே. ரத்னசிரி
செயலாளர்
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சு