கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுலாக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரைக்கும் நீடிக்கும் என்பதோடு அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என்பதோடு குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும் எனவும் அந்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அன்றைய தினம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என்பதோடு வெளிநாட்டு பயணிகளுக்கு இடம்விட்டு இடம்மாறுவதற்கும் முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Previous articleஉலக சுகாதார ஸ்தாபனத்தின் செய்திகளை Whatsappல் பெற.
Next articleமுக்கிய தொலைபேசி இலக்கங்கள்