அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானவை  – சுகாதார அமைச்சு

அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானவை, தேவையில்லாமல் பயணிக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 800 – 900 க்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எதிர்வரும் இரு வார காலப்பகுதி மிக முக் கியமானவை என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்த்து, எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SOURCE -வீரகேசரி பத்திரிகை-