தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாதோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

தனிமைப்படுத்தல்,நோய்தடுப்பு சட்டவிதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவற்றை கவனத்திற் கொள்ளாது செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். 

இது தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

கொவிட்-19 வைரஸ் பரவலானது மீண்டும் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. மக்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும். 

இந்நிலையில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தடுப்பு சட்டவிதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவற்றை கவனத்திற் கொள்ளாது செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதுடன் , இது தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாது மக்கள் ஒன்றுக் கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

இதற்கு புறம்பாக ஒன்றுக்கூடும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தொடர்ச்சியான விடுமுறை காலப்பகுதிகளில் வெளிப்பிரதேசங்களுக்கு செல்லும் போதும் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும். 

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் தொடர்பில் கடந்த வருடம் அக்டோம்பர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அதற்கமைய முகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் கைகளை சுத்தம் செய்துகொள்ளல் என்பவற்றை மக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

Read:  இந்திய வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
SOURCE(செ.தேன்மொழி) -வீரகேசரி பத்திரிகை-