கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கத்தக்க எண்ணிக்கையை விட, அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே ஊடகங்களுடன் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தத் தவறினால், மற்றொரு முடக்கநிலை அல்லது கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Read:  மின் துண்டிப்பு நடைமுறையில் மாற்றம்
SOURCEதமிழன்