குழப்பவாதிகளுக்கு பக்கபலமாக ஹக்கீம் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்

மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இனவாதம், பிரதேசவாதம் வெகுவாக தலைதூக்கும். அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர், முஸ்லிம் என்ற வாதங்களைக் கிளப்பிவிட்டு, ஊர்களுக்கிடையே பிரச்சினைகளை உண்டுபண்ணி, தேர்தலை வெல்ல பல நாடகங்கள் அரங்கேறும். அவ்வாறான நாடகங்களையும், அந்த நாடகங்களை இயக்கும் அரசியல் கட்சிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். யார் முதலமைச்சர்? தமிழரா அல்லது முஸ்லிமா என்ற கதைகளும் பேசுபொருளாக மாறும்.

இந்த விடயத்தில் மக்கள் தெளிவாக இருப்பது அவசியமாகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுளவின் பங்காளிக் கட்சியான நாங்கள் அண்மையில் எங்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் பேசியுள்ளோம். கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் எங்களின் கட்சி கட்டாயம் போட்டியிடும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

தேர்தல் காலம் பந்தால் கிழக்கில், அதிலும் குறிப்பாக கல்முனையில் பல பூதங்கள் வெளிவரும், அதில் முக்கியமான பூதம் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல், (பிரித்தல் என்ற பூதமாகும். இந்த பூதத்தை தேர்தன் காலங்களில் கொண்டுவருவது அரசியல்வாதிகளே. இவர்களுக்குள் பேசிக்கொண்டுதான் இவ்வாறு மக்களை ஏமாற்றுகிறார்களா என்ற சந்தேகம் மக்களிடம் தொடர்ந்தும் இருந்தே வருகிறது. இப்போதெல்லாம் இது தொடர்பில் பேசாதவர்கள் தேர்தல் வந்தால் இதை மட்டுமே பேசுகிறார்கள்.

கருணா அம்மான், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் அரசுடன்தானே இருக்கிறார்கள்? இவர்கள் ஏன் அரசாங்க தலைவர்களிடம் பேசி ஒரு தீர்வைக் காணமுடியாது? கல்முனைக்கு ஒரு பிரதேச செயலகம் மட்டுமே போதுமானது. பாண்டிருப்பு மற்றும் சேனைக்குடியிருப்பை ஒன்றிணைத்து பாண்டிருப்பு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும்.

Read:  பஸ் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு!

கடந்த நான்கரை வருடங்கள் காலத்தை வீணடித்த எதிரணியினருக்கு இப்போதுதான் ஞானம் வந்தது போன்று அரசை விமர்சிக்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதல் கைதை ஆரம்பித்தவர்கள் யார் என்பதை ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், சஜித் போன்றவர்கள்: மறந்து விட்டார்கள் போலும். முஸ்லிம்கள் அந்தக் காலப்பகுதியில் கஷ்டப்படும் போது புதினம் பார்த்துக்கொண்டிருந்த சஜித் பிரேமதாச இப்போது நல்ல பிள்ளை போன்று நடிக்கிறார்.

சமூகத்தைப் பற்றிய தெளிவில்லாமல் பொதுவெளியில் கருத்து சொல்லும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் வழமைபோன்று இப்போதும் சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். சஹ்ரான் தொடர்பில் முஸ்லிம் சமூகம் அறிந்திருந்தால் அவர்களை அடியோடு இல்லாமலாக்கி சட்டத்தின் பிடியில் அவர்களைக் கொண்டு சேர்த்திருப்பார்கள். ரவூக் ஹக்கீம் குழப்பவாதிகளுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எமது நாட்டை ஆளும் ராஜபக்ஷாக்கள் தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயங்குபவர்கள் அல்ல. இந்த வருட இறுதிக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமாக உள்ளது. கடந்த நல்லாட்சிக்காரர்கள் சில சிறுபான்மை கட்சிகளையும் இணைத்துக்கொண்டு செய்த திருகுதாளங்களினால் தேர்தலை இப்போது நடத்துவதில் சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் அந்தத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். நாங்கள் மாகாண சபை முறைமைக்கு எப்போதும் எதிரானவர்கள். இருந்தாலும் ஜனநாயக கடமையான தேர்தல் நடைபெற்றால் நாங்கள் ஆதரிக்க பின் நிற்கப் போவதுமில்லை என்று தெரிவித்தார்.

SOURCEதமிழன் 20-4-21