பாடசாலை நாட்களை இவ்வாண்டில் 150 ஆக குறைக்க  தீர்மானம் – கல்வி அமைச்சர்

கல்விப் பொதுத் தராதர உயர்தர , சாதாரணதர பரீட்சைகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. 

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட வேண்டிய உயர்தர பரீட்சைகளை ஒக்டோபர் 4 ஆம் திகதியும் , டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய சாதாரண தர பரீட்சைகளை 2022 ஜனவரியிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர்  4 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை நடைபெறும். 

அதேபோன்று சாதாரண தர பரீட்சைகள் 2022 ஜனவரி இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படும்.  

அதேபோல் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் 200 நாட்கள் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உரிய காலத்தில் தேசிய பரீட்சைகள் எதுவும் 2020 ஆம் ஆண்டு இடம் பெறவில்லை. 

2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை  கடந்த மாதம் இடம் பெற்றது. 2021 ஆம் ஆண்டு பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைளை 150 நாட்களாக  குறைக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021 க்கான சாதாரண தர பரீட்சையினை  இவ்வருடம் டிசம்பர் மாதம் நடத்த ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. 

இருப்பனும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பரீட்சை ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்படப்பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தயாராக போதுமான காலலகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள காலத்தை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page