தற்போது ரயில் ஊழியர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்தது

தொழிற்சங்க நடவடிக்கையால் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

புகையிரத இயந்திர சாரதிகளும், புகையிரத கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளமையால் குறித்த ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

புகையிரத திணைக்களத்தில், புகையிரத பொது முகாமையாளர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Update இந்நிலையில், ரயில் ஊழியர்களின் திடீர் தொழிற்சங்கப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், கொழும்பு கோட்டையில் இருந்து ரயில் சேவைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு சற்றுமுன்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -வீரகேசரி பத்திரிகை-

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?