பிடவை துணி இறக்குமதிக்கு தடை

ஜவுளி துணி இறக்குமதியை அரசாங்கம் தடைசெய்துள்ளதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவிப்புக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்  அனைத்து ஜவுளி துணிகள் மற்றும் அச்சிடப்பட்ட பத்திக் இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். -வீரகேசரி பத்திரிகை-