மின்சார பாவனையாளர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்

மின்சார பாவனையாளர்களுக்கு பாதுகாப்புத் தொகைக்கான வட்டியை வழங்கும் புதிய திட்டமொன்று நேற்றைய தினம் அறிமுகப்படுத்தபட்டது.

இந்த சலுகையானது லெகோ நிறுவன மின்சார பாவனையாளர்களுக்கு மாத்திரமே கிடைக்கவுள்ளது. இலங்கை மின்சார சபையின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் மின்பாவனையாளர்கள் இதில் அடங்க மாட்டார்கள் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

இலங்கை மின்சார சபை மற்றும் லெகோ மின்சார விநியோக நிறுவனம் ஆகிய இரண்டுமே இலங்கையில் மின்சார பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகத்தை வழங்குகின்றன.

இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் மின்சார பாவனையாளர்களின் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு வட்டி செலுத்தும் விழா இன்றைய தினம் பண்டராநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த ஆணைக்குழு தலைவர் ஜானக்க ரட்ணாயக்க,

“இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குள்ள அதிகாரத்தின் மூலமாக லெகோ நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

அந்த வகையில், லொகோ நிறுவனத்தின் ஊடாக மின்சார இணைப்பின்போது செலுத்தபட்ட மின்கட்டண இணைப்பின்போது செலுத்தப்பட்ட பாதுகாப்பு வைப்புத் தொகையின் அடிப்படையில் 8.68 என்ற வட்டி வீதத்தை மின்சார பாவனையாளர்களின் மின்சார பாவனைக்கான பட்டியல் கணக்கில் குறித்த வட்டி வீதம் வரவில் இடப்படும்.

மின்சார பாவனையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய பிரகடனம் இயற்றப்பட்டு, அதில் உள்ள உரிமைகளைப் பாதுகாக்க தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டன.

மின்சார பாவனையாளர்களின் பாதுகாப்பு வைப்பு தொகைக்கு வட்டி செலுத்துவது மின்பாவனையாளர்களுக்கு சிறந்த அனுகூலமாகும். கடந்த காலங்களில் இந்த வட்டி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மின்சார பாவனையாளர்களினால் சேவை வழங்கும் நிறுவனத்துக்கு அல்லது உரிமைதாரருக்கு செலுத்திய பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு வட்டி செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சட்டத்தின் பிரிவு 28இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வெளிப்படையான முறையில் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதற்கான ஒரு வழிமுறையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உருவாக்கியுள்ளது.

இந்த ஆண்டுக்கான வட்டி 8.68 சதவீதமாகும் என அண்மையில் தீர்மானிக்கப்பட்டது. அந்த வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சார சேவைகளை வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் வட்டியை கணக்கிட்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டும்.

மின்விநியோக உரிமதாரரான இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (லெகோ) தனது வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் வட்டி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

மின்பாவனையாளர்களின் பாதுகாப்பு வைப்பு தொகைக்கு வட்டி செலுத்தும் நடவடிக்கையின் மூலம் லெகோ நிறுவனத்தினால் மாத்திரம் வருடாந்தம் 420 இலட்சம் ரூபாய் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபையும் இந்த வட்டித் தொகையை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம். 

இந்தத் திட்டத்தை இலங்கை மின்சார சபை செயற்படுத்தும் பட்சத்தில், வருடாந்தம் சுமார் 120 கோடி ரூபாய் இலங்கை மின்சார  பாசனையாளர்களின் மின்பட்டியல் கணக்கில் வைப்பில் இடப்படும். இது மின்சார தொழிற்துறையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு  கிடைக்கும் ஒரு பாரிய நிவாரணமாக அமையும்” என்றார்.

-வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters