இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை – சட்டமா அதிபர் அனுமதி (முழு விபரம்)

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளின் தடைக்கு சட்டமா அதிபர் இன்று அங்கீகாரம் அளித்துள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா,  தீவிரவாத நடவடிக்கைகளுக்கான தொடர்புகள் இருப்பதாக தெரிவித்து இந்த அமைப்புகளை தடை செய்தார்.

சட்டவிரோதமாக்கப்பட்டு இஸ்லாமிய அமைப்புக்கள்  விபரம்.

01. United Thowheeth Jama’ath – UTJ

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்

02. Ceylon Thowheeth Jama’ath – CTJ

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்

03. Sri Lanka Thowheeth Jama’ath – SLTJ

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

04. All Ceylon Thowheeth Jama’ath – ACTJ

அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்

05. Jamiyathul Ansaari Sunnathul Mohomadiya – JSM

ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹொமதியா

06. Dharul Adhar @ Jamiul Adhar

தாருல் அதர் @ ஜாமிஉல் அதர்

07. Sri Lanka Islamic Student Movement – SLISM

இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம்

08. Islamic State of Iraq and Syria

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

09. Al-Qaeda

AL-Qaeda அமைப்பு

10. Save the Pearls

சேவ் த பேர்ல் அமைப்பு

11. Super Muslim

சூப்பர் முஸ்லிம் அமைப்பு

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, நாட்டுக்குள் இயங்கிவரும் அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்வதன் அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் , அவ்வாறான பல அமைப்புகளை தடை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்ட மா அதிபர் மேற்குறிப்பிட்ட 11 அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகளை நாட்டுக்குள் தடை செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter