மன்சூர் JPயின் வபாத் – அப்துல் ஹலீம் அவர்களின் இரங்கல் செய்தி

நேற்று இரவு காலஞ்சென்ற அக்குறணை பிரதேச சபை மூத்த உறுப்பினர் மன்சூர் JPயின் மரணசெய்தி மிகவும் கவலையை தருகிறது.

எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு சிறந்த அரசியல்வாதி. எனது மாமனார் மர்ஹும் ஏசிஎஸ் ஹமீட் மற்றும் முன்னால் பிரதேச சபை தவிசாளர் சுலைமான் மற்றும் என்னுடன் மிகவும் நெருங்கி அரசியல் செய்த ஒரு சிறந்த மாமனிதர்.

1991 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச சபையில் அக்குறணை பிரதேச சபை தேர்தலில் போட்டி இட்டு தெரிவான இவர் அன்று முதல் இன்று வரை அக்குறணை பிரதேச சபையின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வாழ்ந்த சிறந்த ஒரு அரசியல்வாதி, மாத்திரம் அன்றி சகலருடனும் சகஜமாக நெருங்கிப் பழகும் மனமான்மை கொண்டவர்.

இது வரை அக்குறணை பிரதேச சபை இம்முறை மக்களால் தெரிவு செய்யபட்ட மூன்று உறுப்பினர்களை இழந்து உள்ளது என்பது மிகவும் வேதனை தருகிறது. அவரது மறைவை கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தை வழங்குவானாக

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous articleமுஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட NGO தகவல்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை
Next articleஇன்றைய தங்க விலை (06-04-2021) செவ்வாய்க்கிழமை