இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் இறப்பு

இத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 793 பேர் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது,

ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி நாள் தோறும் பலி எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இத்தாலியில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 793 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4825 என உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 53,578 எனவும், இதில் புதிதாக 6,557 பேர் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

இத்தாலியை அடுத்து ஸ்பெயின் நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 285 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.