யாழ்ப்பாணத்திற்குள்ளும்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரவியிருக்கலாம்‌ என வட மாகாண ஆளுநர்‌ எச்‌.எம்‌.எஸ்‌.சார்ஸ்‌ தெரிவித்துள்ளார்‌.

அரியாலை கண்டி வீதியில்‌ அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில்‌ நடந்த கூட்டத்தில்‌ கலந்து கொண்ட போதகர்‌ ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுிள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்‌ சுவிட்சர்லாந்தில்‌ இருந்த வந்த மத போதகரினால்‌ கடந்த 15 ஆம்‌ திகதி நடந்த கூட்டத்தில்‌ கலந்து கொண்ட அனைவரும்‌ தேடப்பருகிறார்கள்‌.

குறித்த கூட்டத்தில்‌ கலந்து கொண்ட இருவர்‌ ஏற்கனவே வைத்தியசாலையில்‌ அனுமதிக்கப்பட்ருள்ளனர்‌. ஏனையவர்களை உடன்‌ தகவல்‌ தருமாறு கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்திய சேவைகள்‌ பணிமனையின்‌ தொடர்பிலக்கத்திற்கு (0212227278) தொடர்புகொள்ளுமாறு வட மாகாண ஆளுநர்‌ கோரிக்கை விருத்துள்ளார்‌.


    Read:  இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு 28ல் பயணம்