பாடசாலை விடுமுறை காலம் பயனாக…

எல்லோருக்கும் பயன்பெறும் விதமாக கீழே உள்ள Share பட்டன் மூலம் WhatsApp ,Facebook போன்றவற்றில் பகிருங்கள்

எதிர்வரும் பாடசாலை விடுமுறை காலத்தில் கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக கல்வி அமைச்சினால் இணைய கல்விக்கூடம் என்ற பெயரில் ethaksalawa (Tamil) என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் காணப்படுகின்றது.

இதில், தரம் 1 முதல் தரம் 13 வரை அனைத்து பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆரம்ப பிரிவிற்கான e-பாடங்கள் மற்றும் மேலதிக வாசித்தல் கையேடுகள், e-புத்தகசாலை, சிங்கள-தமிழ் அகராதி, பெரியார்களின் சுயசரிதை, வினாத்தாள்கள் (தரம் 1-11க.பொ.த.சா.தரம் /உயர்தம் கடந்தகால வினாத்தாள்கள் /மாதிரி வினாத்தாள்கள் ), பொழுதுபோக்கு அம்சங்கள் (கல்விசார் விளையாட்டுக்கள்/ பாடல்கள்), பிரிவெனாவிற் குறிய பாடங்கள், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடங்கள் ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.