2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தெரண சிறப்பு தேர்தல் ஔிபரப்பு உடன் நேரடியாக கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.
எனினும், தாமதமானால் பிற்பகல் 2.30 க்கும் 3.00 மணிக்கும் இடையில் முதலாவது தேர்தல் முடிவை வௌியிடக்கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
Akurana Today All Tamil News in One Place