இத்தாலி நாட்டின் தவறும், நாமும்…

“இத்தாலியில்‌ இத்தகைய உயிரிழப்புக்கு காரணம்‌ என்ன என்று அந்நாட்டு மக்களே கூறுவது என்னவென்றால்‌”

உலக நாடுகளை மொத்தமாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ்‌ பாதிப்புக்கு இத்தாலியில்‌ ஒரே நாளில்‌ 400-கும்‌ அதிகமானோர்‌ மரணமடைந்துள்ள நிலையில்‌, அந்த நாட்டு மக்கள்‌ இதனால்‌ செய்யத்‌ தவறியது என்ன என்பது தொடர்பில்‌ தகவல்‌ வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்‌ பாதிப்புக்கு சீனா முதலில்‌ இலக்கானாலும்‌, அதில்‌ இருந்து அந்தநாடு மெதுவாக மீண்டு வருகிறது.

அதேவேளை சீனாவுக்கு அடுத்தபடியாக தற்போது இத்தாலி பெரும்‌ பாதிப்பை சந்தித்து வருகிறது. இத்தாலியின்‌ பெரும் பகுதி கொரோனாவால்‌ மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

இத்தாலியில்‌ பிப்ரவரி 17-ஆம்‌ திகதி 3 பேர்‌ நோய்த்தொற்றால்‌ பாதிக்கப்பட்டிருந்த நிலையில்‌, பிப்ரவரி 22-ஆம்‌ திகதி பாதிக்கப்பட்டோரின்‌ எண்ணிக்கை 79 ஆக அதிகரித்தது.

ஐந்து நாட்களில்‌ பாதிப்பு 26 மடங்கு உயர்ந்தது. பிப்ரவரி 27-ஆம்‌ திகதி 655 பேர்‌ கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டனர்‌.

அதனைத்‌ தொடர்ந்து மார்ச்‌ 3-ஆம்‌ திகதி பாதிக்கப்பட்டோரின்‌ எண்ணிக்கை 2,502 ஆகவும்‌, மார்ச்‌ 8-ஆம்‌ திகதி 7,375ஆகவும்‌ உயர்ந்தது.

அருத்த ஐந்து நாட்களில்‌ நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின்‌ எண்ணிக்கை 10,௦00 அதிகரித்து மார்ச்‌ 13ஆம்‌ திகதி 17,660 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த இரு நாட்களில்‌ கொரோனா தொற்று இருமடங்காகி 41,035 பேர்‌ பாதிக்கப்பட்டதாக இத்தாலி அரசு உறுதி செய்தது.

ஒரே நாளில்‌ 5,322 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில்‌, இன்று ஒரே நாளில்‌ மட்டும்‌ இத்தாலியில்‌ 427 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌.இ தன்‌ மூலம்‌ இத்தாலியில்‌ உயிரிழந்தோர்‌ எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே சீனாவில்‌ 70,420 பேர்‌ குணமடைந்துள்ளனர்‌. ஆனால்‌ இத்தாலியில்‌ 4,440 பேர்‌ மட்டுமே கொரோனா நோய்‌ தொற்றில்‌ இருந்து காப்பாற்றப்பட்டு இருக்கின்றனர்‌.

வைரஸ்‌ பரவலை தடுக்க பாடசாலைகள்‌, கல்லூரிகள்‌, வணிக வளாகங்கள்‌,திரையரங்குகள்‌ ஆகியவற்றை இருவாரங்களாக இத்தாலி மூடி வைத்திருக்கிறது. பொதுமக்களும்‌ வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்‌ எனவும்‌ அறிவுறுத்தியிருந்தது. மேலும்‌ பல முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையும்‌ இத்தாலி அரசு பிறப்பித்துள்ளது.

இருப்பினும்‌, அங்கு உயிரிழப்பு நிகழ்வது தொடர்‌ கதையாகி வருகிறது. இத்தாலியின்‌ மக்கள்‌ தொகையில்‌, முதியோர்களே கணிசமான அளவில்‌ இருப்பதால்‌, அங்கு உயிரிழப்பு அதிக அளவில்‌ நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பின்‌ நெருக்கடி கால தலைவர்‌ மைக்‌ ரையான்‌ தெரிவித்துள்ளார்‌.

இத்தாலியில்‌ இத்தகைய உயிரிழப்புக்கு காரணம்‌ என்ன என்று அந்நாட்டு மக்களே கூறுவது என்னவென்றால்‌,

அரசு விதித்த கட்டுப்பாடுகளை கேட்காமல்‌ அலட்சியப்படுத்தியதுதான்‌ என்கின்றனர்‌. மேலும்‌, கொரோனா வைரஸ்‌ பாதிப்பை சாதாரணமாக கருதிவிட்டோம்‌ எனவும்‌ அரசின்‌ உத்தரவுகளை மீறி தேவையில்லாமல்‌ வெளியே நடமாடியதே இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணம்‌ எனவும்‌ தெரிவிக்கின்ற்னார்‌. இந்த தவறை மற்ற நாட்டு மக்களும்‌ செய்யக்கூடாது எனவும்‌ இத்தாலி மக்கள்‌ அறிவுறுத்துகின்றனர்‌.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page