நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை காவல் துறை ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று முற்பகல் 9 மணிமுதல் தற்காலிகமாக காவல் துறை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதோடு மதியம் 12 மணிமுதல் மீண்டும் அமுலாகும் என காவல் துறைமா அதிபர் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
