வரகாபோலவில் ஒருவருக்கு கொரோனா

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர்‌ அடையாளம்‌ காணப்பட்டதை தொடர்ந்து வரகாபொல நகரில்‌ கடைகள்‌ மூடப்பட்டன.

சுகாதார அதிகாரிகளுடன்‌ கலந்துரையாடலை மேற்கொண்டதன்‌ பின்னர்‌ குறித்த தீர்மானம்‌ மேற்கொள்ளப்பட்டதாக வரகாபொல பிரதேச செயலாளர்‌ ரங்கன சஜீவ தெரிவித்தார்‌.

நெலும்தெனிய, மொரவக பிரதேசத்தில்‌ வசித்து வரும்‌ ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின்‌ வரகாபொல பிரதேச சபை உறுப்பினர்‌ ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்‌ டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அவருடன்‌ நெருங்கி தொடர்பை பேணி வந்த 5 பிரதேச சபை உறுப்பினர்களும்‌ சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read:  உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி
SOURCEHiru News