நாட்டில் நேற்று ஐந்து புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்று ஐந்து புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,828 ஆக அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து நாட்டுக்கு திரும்பிய நால்வரும், கந்தகாடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையத்திலிருந்து ஒருவரும் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 300 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 50 பேரும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

கந்தகாடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையத்திலிருந்து இதுவரை 603 பேரும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 930 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் நேற்று குணமடைந்த நிலையில் வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமையினால் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2,517 ஆக காணப்படுகிறது. 

Read:  மீண்டும் ரணில் !!