Friday , November 24 2017

பெண்கள் இஸ்லாமிய வகுப்புகளில் கலந்து கொள்தல்

கேள்வி :- பெண்கள் இஸ்லாமிய வகுப்புகளில் கலந்து கொள்வதை கணவன்மார்களால் தடை செய்ய முடியுமா?

பதில் :-

ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்புகள் காணப்படும். ஒவ்வொருவரும் வித்தியாசமான ஆளுமைகளை கொண்டிருப்பார்கள். இந்த இயல்பு, ஆளுமை என்பவற்றின் அடிப்படையில் தான் தம்மை சுற்றியருப்பவர்களுடன் நடந்து கொள்வார்கள். குறிப்பாக தனது மனைவியயுடனும் பிள்ளைகளுடனும்.

இந்த மனிதர்களில் கடுமையான வரண்ட உள்ளம் கொண்டவர்கள் இருப்பார்கள். அவர்களின் நடத்தையில் வரட்சி, கடுமை என்பன இருக்கும். இவர்களிடம் காணப்படும் ஆபத்து இந்த வரண்ட கடுமையான இயல்பை மார்க்கம் என்று வாதாடுவார்கள். அவர் ஒரு சின்ன உள்ளம் கொண்ட மனிதராக மேலோட்டமான அறிவு படைத்த மனிதராக இருந்தால் இந்தப் பண்புகளுடன் நடந்து கொண்டு இதுதான் இஸ்லாம் என்று வாதாடுவார்.

அவ்வாறுதான் சில ஆண்கள் பெண்களை ஏளனமாக இழிவுக்கண் கொண்டு தப்பெண்ணம் கொண்டு பார்ப்பார்கள். அவர்களுடன் கடினமான இறுக்கமானபோக்கை கடைபிடிப்பார்கள். பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்வதற்கும் அவனது ஆசைகளை தீர்த்து வைப்பதற்கும் தான் படைக்கப்பட்டுள்ளான் என்று இவர்கள் நினைக்கின்றனர்.

இஸ்லாமிய புத்தகங்களை படிப்பவராக சொற்பொழிவுகளை கேட்பவராக இருந்தும் பெண்கள் பற்றிய தமது பார்வையை மாற்றிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

பிற்போக்கான சூழலில் இருந்து வளர்ச்சியடைந்த சூழலுக்கு வந்த போதும் பெண்கள் பற்றிய அவர்களது புரிதல் பிற்போக்கான சூழலில் இருந்த போது எவ்வாறு இருந்ததோ அவ்வாறே எந்த வளர்ச்சியும் இன்றி காணப்படுகின்றது. ஆச்சரியம் என்னவெனில் சிலர் படித்திருப்பார்கள் கலாநிதிப் பட்டம் பெற்றிருப்பார்கள். வைத்தியராக, லோயராக, இன்ஜினியராக இருப்பார்கள்.

#ct_ohbypwt1tyxogkmbtsek {font-size:12px;}

ஆனால் பெண்கள் விடயத்தில் அவர்களின் சிந்தனை பிற்போக்குத்தனமாகவே இருக்கும். எந்த வளர்ச்சியும் கண்டிருக்காது.

இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியது போல வேறு எந்தவொரு மதமும் கொள்கையும் கண்ணியப்படுத்தியதை பார்க்க முடியாது.

அவளை மனிதராக கண்ணியப்படுத்தியது.

அவளை பெண்ணாக கண்ணியப்படுத்தியது.

அவளை மகளாக கண்ணியப்படுத்தியது.

அவளை மனைவியாக கண்ணியப்படுத்தியது.

அவளை தாயாக கண்ணியப்படுத்தியது.

அவளை சமூகத்தில் ஒரு உறுப்பினராக கண்ணியப்படுத்தியது

அல் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்

#ct_z95rrascwa34kytjj4ld {font-size:12px;}

فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ ۖ بَعْضُكُم مِّن بَعْضٍ ۖ فَالَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِن دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ثَوَابًا مِّنْ عِندِ اللَّـهِ ۗ وَاللَّـهُ عِندَهُ حُسْنُ الثَّوَابِ

“ஆதலால் அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான் “உங்களில் ஆணோ பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன் (ஏனெனில் ஆனாகவோ பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம். எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ மேலும் போரிட்டார்களோ மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன். இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்) இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும். இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.” (3:195)

ஆண் பெண்ணிலிருந்து உள்ளவன். பெண் ஆணிலிருந்து உள்ளவள். அவனை அவள் பூரணப்படுத்துவாள். அவளை அவன் பூரணப்படுத்துவான். ஒருவரை ஒருவர் புறக்கணித்து ஒருபோதும் இங்கு வாழ முடியாது.

எனவே தான் நபி(ﷺ) அவர்கள் சொன்னார்கள்.

#ct_y7vsqrwf0t3a3c2ucapz {font-size:12px;}

“பெண்கள் ஆண்களின் அரைவாசி”

ஆதாரம் அஹ்மத்

இஸ்லாத்தில் பொறுப்புக்கள் ஆண் பெண் இருசாராருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் சீரியஸான சமூகப் பொறுப்புக்ககளும் இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

அல் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்

#ct_52crd3oqsckdjr2wehrz {font-size:12px;}

وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّـهَ وَرَسُولَهُ ۚ أُولَـٰئِكَ سَيَرْحَمُهُمُ اللَّـهُ ۗ إِنَّ اللَّـهَ عَزِيزٌ حَكِيمٌ

“முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றன ர் அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள் தீயதை விட்டும் விலக்குகிறார்கள் தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள் (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள் அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாக வும் இருக்கின்றான்.” (9:71)

அன்று நபி(ﷺ) அவர்களின் காலத்தில் பெண்கள் மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கு, ஸாலிஹான முஸ்லிம் பெண்களுடன் அறிமுகமாவதற்கு பள்ளிவாயில் மட்டுமே காணப்பட்டன.

எனவே நபி(ﷺ) அவர்கள் சொன்னார்கள்

#ct_ot7oxalgn58kvo1gtecs {font-size:12px;}

அல்லாஹ்வின் அடிமைகள் பள்ளிவாயிலுக்கு வருவதை தடை செய்ய வேண்டாம். (முத்தபகுன் அலைஹி)

இன்று எமது காலத்தில் பள்ளிவாயல் போன்று இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வதற்கு நிறைய அமைப்புக்கள், நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் கலந்து கொள்வதன் மூலம் பெண்கள் தமது மார்க்க அறிவை அதிகரித்துக் கொள்ள முடியும். இஸ்லாத்தை உயிர்ப்பிப்பதற்கு செயற்பட முடியும். இஸ்லாத்திற்கு உழைப்பவர்களுடன் அறிமுகம் ஏற்படும். அதன் மூலம் அவர்களுக்கு அவர்களது நல்ல பணியில் உதவி செய்ய முடியும். இது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீதும் கடமையாகும். ஒவ்வொருவரும் தமக்கு இயலுமான விதத்தில் இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் இஸ்லாமும் தொலைந்து முஸ்லிம் சமூகமும் தொலைந்து போகும். இஸ்லாத்தின் கொடி தாழ்ந்து விடும்.

இன்றைய காலத்தில் இந்தப் பணியின் கடமை மேலும் அதிகரிக்கின்றது.

ஏன் எனில் எதிரிகள் எதிர்ச் சக்திகள் இஸ்லாத்தை முஸ்லிம் சமூகத்தை சீர்குழைக்க பெண்களை ஒரு படையாகத் திரட்டி இஸ்லாத்திற்கு எதிராகப் பயன்படுத்துகின்றது. இஸ்லாத்தை சீர்குழைக்க அதன் உள்ளேயும் வெளியேயும் பல சதிகள் இடம் பெறுகின்றன. எனவே இப்படியான ஒரு சூழலில் எமது பெண்களை மார்க்கத்தை கற்கவிடாமல் இருப்பது மிகப் பெரும் அநியாயமாகும். பெண்கள் மார்க்கத்தை கற்பதற்கான அதற்காக உழைப்பதற்கான ஏற்பாடுகளை ஆண்கள் அவர்களுக்கு செய்து கொடுப்பது கடமையாகும்.

இஸ்லாத்தை முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்கு பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

#ct_vip0z1l279qqzdfnl9ew {font-size:12px;}

Alwasath.org