Friday , November 24 2017

மகாஸிதுஷ் ஷரீஆ – கோட்பாட்டிலிருந்து நடைமுறை நோக்கி

மகாஸிதுஷ் ஷரீஆ பற்றிய கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் இன்று சர்வதேசஅளவில் மிக அதிகமாக நடந்துவருகிறது. இலங்கையிலும் அது ஓரளவு கவனத்தைப் பெற்றிருக்கிறது என்றால் மிகையாகது. இத்துறை எவ்வகையில் எமக்குஅவசியமாகிறது, குறிப்பாக அரசியலில் இத்துறையை எவ்வாறு பிரயோகிக்கலாம் போன்ற விடயங்களை இக்கட்டுரை மிகசுருக்கமாக பேசுகிறது.

ஆரம்பகால அறிஞர்கள் மகாஸித்சிந்தனையை கோட்பாடாக முன்வைத்து மெதுமெதுவாக அதனை ஓர் கலையாக வளர்த்தெடுத்தனர். இமாம்களான‌ ஜுவைனி, கஸ்ஸாலி, கராபி, அப்துஸ்ஸலாம் என்று அதன் தொடர் நீட்சி பெற்று ஷாத்பி வரை வளர்ந்தது. இமாம் ஷாதிபி மகாஸித் கோட்பாட்டை மிகக் கச்சிதமாக தனது ‘முவாபகாத்’ புத்தகத்தில் வடிவமைத்தார். மகாஸித்தை ஒரு கலையாக வடிவமைத்து இஸ்லாமிய சிந்தனையை வளப்படுத்திய பெருமை ஷாதிபியையே சாரும். அதனைத் தொடர்ந்து வந்தகாலப்பிரிவில் மகாஸித் எவ்வித வரவேற்பையும் பெறாமல் இருந்தது முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கட்டத்தை தெளிவாக அடையாளப்படுத்துகிறது.

நவீன காலத்தின் ஆரம்ப பிரிவைச் சார்ந்தவர்கள் மகாஸித் சிந்தனையின் அவசியத்தை புரிந்து கொண்டனர்.

தாஹிர் இப்னு ஆஷூர் முக்கியமானவர். முவாபகாத்தை உயிர்ப்பிப்பதற்காக பாடுபட்டார். அத்தோடு நின்றுவிடவில்லை.மகாஸித் சிந்தனையை காலமாற்றங்கலுக்கு ஏற்ப புதுமைப்படுத்தினார். உதாரணமாக மார்க்கம், உயிர், மானம், அறிவு, பணம் ஆகியவற்றை பாதுகாத்தல் தனி மனிதனோடு சேர்த்து சமூகத்தையும் உள்ளடக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். மகாஸிதுஷ் ஷரீஆ பற்றிய அவரது புத்தகம் நவீனகாலத்தோடு உறவாடியது. ஜமாலுத்தீன்அதிய்யா, ரைஸூனி, கர்ளாவி போன்றவர்களது சிந்தனைகளும் மகாஸித் சிந்தனையை நவீன காலத்தை முன்வத்து பேசுவதாக இருக்கிறது. இன்றைய முக்கிய சிந்தனையாளர்களாக கருதப்படும் ஜாஸிர்அவ்தா, தாரிக் ரமழான் போன்றவர்கள் மகாஸித்சிந்தனையை குறிப்பாக இஸ்லாம் முன்வைக்கும் அரசியல் தத்துவத்தோடு இணைத்ததாக முன்வைத்து வருகின்றனர். மகாஸித் கோட்பாட்டுக்கு ஓர் நடைமுறை வடிவம் கொடுக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, சுதந்திரம் போன்ற கருத்தாடல்களை மகாஸித் சிந்தனையினூடாக அணுகுவது பற்றி சிந்தித்து வருகின்றனர்.

#ct_y7k2k8j73wa73iwlbf5h {font-size:12px;}

மறுபுறம் டியூனேஷியா ராஷித்அல்கனூஷி, துருக்கி ரஜப் தையிப் உர்துகான் போன்றவர்களது அணுகுமுறையை சில ஆய்வளர்கள் ‘மகாஸித்அணுகுமுறை’ என்றழைக்கின்றனர். ஷரீஆவின் இலக்குகளை நோக்கி நாட்டை நகர்த்திச்செல்லல் அவர்களது அணுகுமுறை எனவும் விளக்குகின்றனர்.

மேற்கூறிய சுருக்கமான பின்னணியிலிருந்து எமது நாட்டில் மகாஸித்சிந்தனையை எவ்வாறு நடைமுறைநோக்கி நகர்த்துவது என்பது மிக விரிவானதொரு பகுதி.

இன்ஷாஅல்லாஹ் எதிர்காலங்களில் இப்பகுதிகளில் விரிவாக செல்லலாம் என்றிருக்கிறேன். இங்கு ஒரு பகுதியை மாத்திரம் தொட்டுக்காட்டுவது பொருத்தமானது. இலங்கையின் சட்டயாப்பு முஸ்லிம்களின் கவனத்தை போதியளவில் பெற்றதாக‌ இல்லை. யாப்பு மகாஸித்தின் எப்பகுதிகளில் உடன்பட்டுச் செல்கிறது, எங்கெல்லாம் முரண்படுகிறது என்பது மிகக்கவனமாக வாசித்துப்பார்க்கப்பட வேண்டிய ஒரு பகுதி. பாதுகாப்பு ஷரீஆ வின் இலக்குகளில் முக்கியமானது. நீதியும், பொருளாதார அபிவிருத்தியும் மகாஸித் சார்ந்தவை. மகாஸித், யாப்புபற்றிய இவ்வகையான ஒப்பீட்டுப்பார்வை அவசியமானது. அடுத்த கட்டம் யாப்பின் நடைமுறை சார்ந்தது. மகாஸிதும் யாப்பும் உடன்படும் விடயங்களின் நடைமுறையின் அளவுயாது? என்பதை கணிப்பிடுவது தொடர்ந்து வரும் கட்டம். சுட்டிகள் கொண்ட அளவீடு பயன் கொடுப்பதாய் அமையும். பொருளாதார அபிவிருத்திச் சுட்டியில் இலங்கையின் தரம் யாது? எவ்வாறு அதனை உயர்த்தலாம்? என்பது அடுத்தகட்டம்.

மகாஸித்சிந்தனைக்கு இவ்வகையான நடைமுறைவடிவம் கொடுப்பதுதான இன்றைய தேவையாக இருக்கிறது.

#ct_p5wqcd7xqcxe7d1tso64 {font-size:12px;}

Alwasath.org