Tuesday , June 27 2017
Breaking News

கல்எலிய பெண்கள் அரபுக்கல்லுாரி மீதான வீண்பழிக்கு வெளியேற்றப்பட்ட மாணவியே காரணம்

Original Post: கல்எலிய பெண்கள் அரபுக்கல்லுாரிக்குள் லீலைகள்; ஆதங்கப்படும் பழைய மாணவிகள்

Original Post: கல்எலிய பெண்கள் அரபுக்கல்லுாரிக்குள் லீலைகள்; ஆதங்கப்படும் பழைய மாணவிகள்

ஒரு முஸ்லிம் லேடிஸ் மதரசாவில் நடக்கின்ற விடயங்களை இப்படி ஒரு வெப்சைட்டுக்கு எழுதி வெளியில் பேசுவது பாவம் என்று பலபேர் அறிவுரை சொல்லுவார்கள். இங்கே நடக்கிறது அனுபவிக்கிற மக்களுக்குத்தான் தெரியும். இதை விட வேறு முறை தெரியாததால் இங்கே வெப்சைட்டுக்கு அனுப்ப தேவை என்பது, சரியான நடவடிக்கை எடுத்தல் எழுத இனிமேலும் தேவை வராது. இது பெரிய புற்றுநோயாக புகுந்துவிட்ட ஆழாமான தவறு, ஒரு நாள் ஒரு மாதம் இல்லாவிட்டால் ஒரு வருடத்தில் திருத்தி முடிக்க எழுமான தவறுகள் அல்லவே?

வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் சென்று சொல்வது? “கல்எலிய முஸ்லிம் மகளீர் அரபுக் கல்லூரி பலவகையான மாணவிகளை தன்னகத்தே கொண்ட இலங்கையின் புகழ்பெற்ற ஒரு மதரசா மட்டுமல்ல அரசாங்கப் பாடத்திட்டத்துடனான கல்லூரி. A/L பயோ சயன்ஸ் வரை படிப்பதற்கும், பல்கலைக் கழக மருத்துவ பீடத்திற்கு சென்று முஸ்லிம் பெண் வைத்தியராக வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ள ஒரு சிறந்த இடமாகும்.” உண்மையில் இப்படித்தான் வெளியில் இருப்பவர்களும், பல மாணவிகளின் பெற்றோரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உள்ளே இருக்கும் வேதனை, கஷ்டம், வெளியில் சொல்ல மாட்டாத விடயங்கள், இரகசியங்கள், துன்பங்கள், ஆறாக ஓடும் கண்ணீர்கள் ஒவ்வொரு ஹொஸ்டல் உள்ளேயும், மதரசா உள்ளவும், கிளாஸ் ரூம் உள்ளேயும் மூச்சுத்திணறி மவுத்தாகி வெளியே தெரியாமல் மாணவிகளின் கண்ணீரில் குளிப்பாட்டி, கல்லூரிக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டு விடுகின்றன. அப்படியான சில விசயங்களை சொல்லித்தான் ஆக வேணும். இல்லாவிட்டால் யாருமே எக்காலத்திலுமே தெரிந்துகொள்ள போவதில்லை.

சுத்தம் ஈமானின் பாதி என்று படித்துவிட்டு இங்கே வந்தால், பல தண்ணீர் தாங்கிகள் வருஷக் கணக்கில் சுத்தம் செய்யப்படவே இல்லை. அசுத்தமான தண்ணீர்தான் பல ஹொஸ்டல் மாணவிகளுக்கு. சமையலறைகளில் அசுத்தம். சிலபேருக்கு அடிக்கடி வயிற்றில் பிரச்சினைகள். மாணவிகளுக்கு சுகமில்லாத நாட்கள் வரும் பொழுது சில ஆண் ஆசிரியர்களின் பார்வைகள், கேள்விகள் வேணுமெண்டே மாணவிகளை தாக்கும்.

கல்லூரி போர்டின் தலைவராக இருக்கும் சு** ஹாஜியாருக்கும் உப அதிபராக இருக்கும் அழகான பழைய மாணவிக்கும் இடையில் முறைகேடான உறவு இருப்பதை அனைவரும் இங்கே அறிவார்கள். உப அதிபருக்கு வயதாகியும் இவருக்கு திருமணம் இல்லை. பேசி வரும் கலியாணங்களை குழப்பி விடுவதில் நிர்வாகம் ஈடுபடும். பிரசிடன்ட் உம், இவவும் இரகசியமான பொழுதுகளில் பலர் கண்கள் சாட்சி. ஆனால் பயம் காரணமாக யாரும் வெளியே நேரடியாக சாட்சி சொல்றதற்கு வர முடியாது. எல்லாமே கசாமுசா பேச்சோடு இங்கேயே இரகசியமாக புதைந்துவிடும். இதே மாதிரியே பழைய மாணவிகள் இங்கே வேலைக்கு சேர்ந்துவிட்டால் அதில் ஒரு கள்ள தொடர்புக்கு வலை விரிக்கப்படும். திறமையை விட, உடல் அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம். அதன் பிறகு அவர்களுக்கு கலியாணம் என்றது ஹராம் ஆக்கின மாதிரித்தான். கலியாணம் முடிக்க முடியாத மாதிரிக்கு பேச்சுவார்த்தைகளில் எப்படியும் குழப்பம் ஏற்படுத்த நிர்வாகம் தவறுவதில்லை. (பலவீனமான குடும்பங்களை சேர்ந்தவர்களை பார்த்துத்தான் வேலைக்கும் எடுப்பார்கள்) அதனால் இதை எல்லாம் மீறி கலியாணம் நடந்தால் அது குதிரைக் கொம்புதான்.

பெற்றோரின் பணத்தில் பீஸ் கட்டி படிக்கும் பிள்ளைகளை விட அநாதை பிள்ளைகள்  மீது நிறையவே பாகுபாடு காட்டப்படும் நிலைமை உள்ளது. பிரச்சினைகள், விசாரணைகள் என்று வந்தால் எல்லா மாணவிகளும் மோசமாக நடத்தப் படுவார்கள், அதில் பணக்கார பிள்ளைகளுக்கு ஒரு விதமான வார்த்தைகளில் விசாரணையும், அநாதை பிள்ளைகளுக்கு மோசமான வார்த்தைகளில் விசாரணையும் நடக்கும். மேலும் சிங்கள மீடியம் பிள்ளைகள் தாழ்த்தப்பட்டு வேறுவிதமாக பேசப்படுவதும் நடைபெறும். நிர்வாகம் எப்பொழுதுமே “சிங்கள – முஸ்லிம்(தமிழ்)” என்று வேறுபாடு காட்டி பிரித்து வைத்து இருக்கும். மாணவிகளுக்கு இடையில் சிங்கள – முஸ்லிம்(தமிழ்) ஒற்றுமையில்லை.

இரவில் கேர்பியூ (ஊரடங்குச் சட்டம்) இருக்கிறது. ஒரு ஹொஸ்டலில் இருந்து இன்னொரு ஹொஸ்டல் போக முடியாது. காரணம் தவறான உறவுகளை தவிர்ப்பது என்று சொன்னாலும், ஹோச்டல்களில் இது உறவுகள் அதிகம் நடக்கிறது. பெண் ஆசிரியைகள் ஆசிரியைகளை ஜோடியாகவும், மேலும் தங்களக்கு என்று சில மாணவிகளையும் தெரிவு செய்து கணவன் மனைவி போன்ற நிலையில் உறவுகள் உள்ளன. இது இங்கே உள்ளே இருக்கும் எல்லோருக்கும் தெரியும். இங்கே படித்து முடிந்து வெளியே சென்று கலியாணம் முடித்ததும், கணவனோடு (ஆண்) முடியாமல் கஷ்டப்படும் பலர் உள்ளனர். இங்கே பழக்கிய கெட்ட பழக்கம் காரணம். மகளுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று எந்த பெற்றோரும் இங்கே அனுப்புவதில்லை.

இங்கே ஆண் ஆசிரியர்களாக இருப்பவர்கள் மாணவிகளை காதலிப்பது, தங்களது சகோதரர்களுக்கு, நண்பர்களுக்கு மாணவிகளை காதலிக்க செட் பன்னி கொடுக்கிறது போன்றவைகள் மட்டுமல்ல, ஒரு சில ஆன் ஆசிரியர்களுக்கும், மாணவி தாயார்க்கும் கூட கள்ள உறவுகள் உள்ள நிலமை காணப்படுகிறது. ஒரு மாணவி இதனால் மனமுடைந்து ஒரு நிலைக்கும் முகம் கொடுத்தார். ஆன் ஆசிரியர் அந்த மாணவியின் வீட்டுக்கு, மாணவியின் கல்வி பற்றி பேசுவதாக போவது கல்லூரியின் எந்த சட்டத்தில் உள்ளது? அந்த ஆசிரியரின் தம்பி ஆரம்பத்தில் மாணவியை காதலித்து பின்னர் கைவிட்டார். மாணவியின் நிலையை கொஞ்சம் யோசிச்சி பாருங்கள். இது ஒரு சம்பவம் மட்டும் உதாரணத்திற்கு.

மாணவிகளிடம் பீஸ் வாங்குகிறார்கள், பல அரபு நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் வருகிறது. தனிப்பட்ட அரபிகள் கல்லூரிக்கு வரும்பொழுது முக்கியமாக அநாதை பிள்ளைகளை காட்டியும் பணம் பெறப்படும். அநாதை பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. பெறப்படும் பணத்திற்கு சரியான கணக்கு வழக்கு ஒபிஸில் இருப்பவர்களுக்கே தெரியாது. எல்லா பணமும் எங்கே போகிறது என்றும் யாருக்கும் தெரியாதாம்.  திருமணம் செய்யாமல் ஒரு ஆணோடு தொடர்பாகி இங்கே வந்த ஒரு பெண்ணும் இருக்கிறார். அவர் முதலில் வேறு மதம். அவர் இங்கே உள்ளவர்களின் பல பல ரகசியங்களை வைத்துக்கொண்டு போடுகின்ற ஆட்டம் பெரிய ஆட்டம் அது வேறு.

எழுதினால் இன்னுமும் விடியும் வரை எழுத கண்ணீர் கதைகள் இருக்கிறது. உண்மையாக கல்லூரி தொடர்பாக யாருக்கும் அக்கறையும், ஆசையும் இருந்தால் இது வரை எழுதியது போதும், நடவடிக்கை எடுப்பதற்கு. யார் நடவடிக்கை எடுப்பார்கள்? யார் நடவடிக்கை எடுத்தாலும் மாணவிகள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுங்கள். இங்கே மாணவிகள் பயமுறுத்தி அடிமைகள் போன்று அடிபணிய வைக்கப்பட்டே உள்ளனர். ஆஸ்ரியைகளின் ஆடைகளை அயன் பண்ணிக் கொடுப்பது கூட மாணவிகளின் கடமைதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

உண்மையாக அக்கறை உள்ளவர்கள், உண்மையாக இதை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் பழைய மாணவிகள் kaleliyamlac@gmail.com தொடர்பு கொள்ளுங்கள். எங்களால் முடிந்ததை செய்வோம்.

Source: ceylonmuslim.com

கல் எஎலிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி இந்த வதந்திகளுக்காக தலைகுனிய தேவை யில்லை. தான் செய்த தவறுகளுக்காக கல்லூரி நிருவாகத்தினால் வெளியேற்றப்பட்ட ஒருவரின் வைராக்கிய வரிகள்தான் அவை. இதில் எந்த வித உண்மையுமில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு சம்பந்தப் பட்டவரை இலங்கை மக்கள் அனைவருக்கும் தெரியப் படுத்தி தண்டணை வழங்கப்பட வேண்டும் என்பதே இக்கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற, மற்றும் தற்போது இக்கல்லூரியில் கல்வி பயிலும் ஒவ்வொரு இதயங்களினதும் அழுகைக் குரல்.!

குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டும் எண்பதும் இரவு வேளைகளில் விடுதிக்கு வெளியே திரிந்து கொண்டிருக்கக் கூடாது என்பதும்,அனைத்துக் கல்லூரிகளினதும் சட்டம்.அதற்கு இக்கல்லூரி மட்டும் விதி விலக்கல்ல.இப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளை கெட்ட எண்ணங்களும் நடத்தைகளும் கொண்ட ஒருவரால் தான் பேச முடியும் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.அல்லாஹ் போதுமானவன்.

அத்துடன் அதில் குறிப்பிடப்பட்ட உப அதிபர் திருமனமாகாதவர் என்று கூறப்பட்டவர் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். Alhamdulillah.

இது வெறும் படு அவதூறு ஆகும். பொறாமை கொண்டு வெறியாய் திரிபவரின் சதியாகும்

ஏனெனில் கல் எலிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி தற்பொழுது மார்கத் துறையில் சரி கல்வித்துறையிலும் சரி இரண்டு துறையிலும் Alhamdulillah சிறந்து விளங்குகிறது. இதுவரை
எத்தனையோ மெளளவிமார்களை வெளியேற்றியுள்ளது.
அவர்களின் பணியும் ஏராளம்.
Example. த‌ற்போதைய  ஆயிஷா சித்திக்காவை ஸ்தாபித்து அதிபர் ஆக கடமையாட்டுபவர் கூட கல்எலிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரியிலேயே கல்வி பயின்று மெளளவியாவாக வெளியேறியவர் என்று குறிப்பிடுவதில் பெருமிதமடைகிறேன்.

இதுபோல் இதுவரை அபூதாவி, ஜாமிஉல் அஸ்ஹர் போன்ற வெளி உலக பல்கலைக்கழகங்களில் கூட அதிகமானவர்கள் கல்வி பயின்று வெளியேறியுள்ளனர் இவர்களையும் அங்கு கற்பதற்காக வெளியேற்றியது முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரியே.

இக்கல்லூரியிலிருந்து வெளியேறியவர்கள் அல்ஆலிமா( part 1 , 2)exam, தர்மசாரிய இஸ்லாமிய தீனிய்யாத், அகதிய்யா, diploma in Arabic, A/L, O/L போன்ற அனைத்து exam um சித்தியடைந்த நிலையிலேயே வெளியேறுகின்றனர் .

தற்போது கூட bio ( விஞ்ஞானப்பிரிவு )உடன் சேர்ந்த உயர்தர பாடத்திட்டத்தை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. Alhamdulillah.

சிங்கள, தமிழ், மொழியினூடே மார்க்கம், உலக கல்வி இரண்டும் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது.

எனவே மார்க்கம், உலக கல்வி இரண்டிலும் சிறந்து விளங்கும் இக்கல்லூரிக்கு இக்கல்லூரி மீது பொறாமை கொண்டவர்களினால் எழுதப்பட்ட சதியே இதுவாகும்.

இவர்கள் எழுதியது போல் இப்புனித கல்லூரியில் இதுவரையும் எந்த அசம்பாவித நிகழ்வும் நடை பெறவில்லை.  இதுபற்றி நீங்கள் சாட்சி கேட்பீர்களானார் அதற்கு கல்லூரிகல்லூரிமாணவிகளே சாட்சி.  எனவே நீங்கள் கல்லூரி மாணவிகளை நேரடியாக சந்தியுங்கள். கல்விகற்று வெளியேறியவர்களும் சரி  அல்லது தற்போது கல்வி பயிலும் மாணவிகளை அனுகி தாராளமாக கேட்கலாம். உறுதியாய் கூறுகிறேன் அவ்வாறு எந்த அசம்பாவிதமும் இல்லை. நான் கூறும் இவ்வார்த்தைகளுக்கு அல்லாஹ்வே சாட்சி.

எனவே கல்லூரி மாணவிகளே மனம் தளர வேண்டாம். அல்லாஹ் இவ் அநியாயத்திற்கு எதிராக நமக்கு உதவி செய்வான்.

Surah An-Noor, Verse 11:

إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ لِكُلِّ امْرِئٍ مِّنْهُم مَّا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ وَالَّذِي تَوَلَّىٰ كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ
24:11]

எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது மேலும், அ(ப்பழி சமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு

Surah An-Noor, Verse 12:

لَّوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَٰذَا إِفْكٌ مُّبِينٌ
[24:12]

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா? ?

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُوَن [24:19] எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

மேலே எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் குர் ஆன் வசனங்கள் அறிவுள்ளவர்களுக்கு அத்தாட்சியாகும்
.ஏறக் குறைய ஐம்பது வருடங்களுகு மேலான சரித்திரத்தைக் கொண்ட ஒரு ஸ்தாபனத்தை ஒரே ஒரு கீழ்த்தரமான வார்த்தையின் பதிவின் மூலம்  ஆட்டம் காண முடியுமா? ?

حسبنا الله ونعم الوكيل     “எவரேனும் தவறிழைக்காமல், குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அதை பொறுமையாக தாங்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை.”
அநியாயமாய் அவதூறு கூறி புனிதமான முறையில் இயங்கி வரும் கல்லூரிக்கு அபான்ட பழியை சுமத்தியவருக்கு அல்லாஹ் போதுமானவன்.

இதற்கு தான் அல்லாஹ் மறுமை ஒன்றை வைத்திருக்கிறான்.

(CeylonMuslim)