Saturday , April 29 2017

தாய்ப்பால் அதிகம் சுரக்க பேரிக்காய் சாப்பிடுங்க!


பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது. நாட்டு ஆப்பிள் என்றும் ஏழைகளின் ஆப்பிள் இதை அழைப்பார்கள்.

பேரிக்காய் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. விலையும் மிகவும் குறைவானதே. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும்.

எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

பேரிக்காயை அடிக்கடி உண்ணும்போது நல்ல பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.

கர்ப்பிணி பெண்கள் பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக பிறக்கும்.

சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும்.

மன உறுதியும், மனத்தெம்பும் ஏற்படும். சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் இது. அவர்கள் எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.

அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக் கூடியது. பேரிக்காய் பழத் தோலில் அதிக அளவு உள்ள தாவர ஊட்டச் சத்துகள் புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகிறது என்று புதிய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.

புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.

பேரிக்காய் ஒரு சில மாதம் மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் வாங்கி, அவசியம் சாப்பிட வேண்டிய பழம் பேரிக்காய் என்பது மறுக்க முடியாத உண்மை.

The post appeared first on Akuranatoday.com