Friday , November 24 2017

பாக்கிஸ்தான் உளவுப்படை தலைவர் விரைவில் மாற்றம்!


இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து மூக்கை நுழைத்துவரும் பாகிஸ்தான், எல்லைப்பகுதி வழியாக தீவிரவாதிகளை நாட்டில் ஊடுருவ வைப்பதுடன் ,இந்தியாவின்  பலபகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களையும் ஊக்குவித்து வருகிறது.

பாகிஸ்தானின் அதிமுக்கிய உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ரிஸ்வான் அக்தர் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்று கொண்டார்.

தனது மூன்றாண்டு பதவிக்காலத்தை வரும் 2017-ம் ஆண்டில் அவர் நிறைவுசெய்யும் நிலையில் இந்தியாவுடன் முற்றும் மோதல்போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உளவுப்படை தலைவர் பதவியில் விரைவில் மாற்றம் மேற்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்த இயலாத தகவல் வெளியாகியுள்ளது.

கராச்சி நகர ராணுவ தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார் என்பவர் ரிஸ்வான் அக்தருக்கு பதிலாக இந்த பணியில் நியமிக்கப்படக்கூடும் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

எனினும், இந்த தகவலை உறுதிப்படுத்த பாகிஸ்தான் ராணுவ தலைமை செய்தி தொடர்பாளர் அசிம் பாஜ்வா மறுத்துள்ளார். அப்படி ஒரு எண்ணம் அரசிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

The post appeared first on Akuranatoday.com