Wednesday , June 28 2017
Breaking News

கிரீஸ் நாட்டில் நாளை முதல் விமானங்கள் ஸ்டிரைக்!


கிரீஸ் நாட்டில் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தை மறுசீரமைக்கும் அரசின் திட்டத்திற்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சங்கத்திடம் முன்கூட்டியே கலந்து ஆலோசிக்காமல் தங்களின் நிர்வாக பங்களிப்பை பறிப்பதாக இந்த சீர்திருத்தங்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், சிவில் விமான போக்குவரத்து ஆணைய மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 24 மணிநேர சுழற்சி வேலை நிறுத்தத்திற்கு போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான விமானங்களை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏஜியன் மற்றும் அதன் துணை நிறுவனமான ஒலிம்பிக் ஏர் ஆகிய நிறுவனங்கள் அனைத்து விமானங்களையும் நாளை ரத்து செய்துள்ளன.

அயர்லாந்தின் பட்ஜெட் விமான நிறுவனமான ரைனர், இன்றும் நாளையும் 110 விமானங்களை ரத்து செய்துள்ளது.

இதற்கிடையே, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என போக்குவரத்து துறை மந்திரி வலியுறுத்தி உள்ளார்.

The post appeared first on Akuranatoday.com