Wednesday , June 28 2017
Breaking News

இரவில் சிறுவர்கள் இணையத்தளம் பயன்படுத்த சீனாவில் தடை!


சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுப்பதற்கு இரவு நேரங்களில் இணையதளத்தை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது.

சீனாவின் இணையதள தகவல் மையம் தெரிவித்துள்ள செய்தியில்,

சீனாவில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை 23 சதவீதம் பேர் என்றும், அதில் 18 வயதுக்குட்பட்டவர்கள்  என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சீன அரசு செய்திகுறிப்பில் கூறியதாவது:

சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து ஆன்லைன் கேம்கள் இரவு நேரங்களில் விளையாட தடை விதிக்கப்படுகிறது.

சிறுவர்கள் இணையதளத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீன அரசு ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஆன்லைன் கேம் நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் கேம்மிற்கு அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சீன மக்கள் தங்களது ஆதரவை அந்நாட்டு அரசிற்கு தெரிவித்துள்ளனர்.

The post appeared first on Akuranatoday.com