Wednesday , June 28 2017
Breaking News

அமெரிக்க தேர்தல் முன் கூட்டியே வாக்களித்த ஒபாமா!


சிகாகோவில் வாரவிடுமுறையை கழிக்க வந்த ஒபாமா, அதிபர் தேர்தலில் முன் கூட்டியே வாக்களித்துள்ளார்.

ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நவம்பர் 8–ந் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தொழில் அதிபரும், பெரும் கோடீசுவரருமான டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர்.

தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவில் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் உரிமை நடைமுறையில் உள்ளது.  சில மாகாணங்களில் 4 அல்லது 5 வாரங்களுக்கு முன்புமும், சில மாகாணங்களில் 50 நாட்களுக்கு முன்புருந்தும் வாக்களிக்கலாம்.

இந்நிலையில் சிகாகோவிற்கு விடுமுறையை கழிக்க வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்துள்ளார்.

இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து கடந்த முறை எம்பியாக வெற்றி பெற்ற அதிபர் ஒபாமா அப்போது தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post appeared first on Akuranatoday.com